சென்னை: சென்னையில் இன்றைய 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலையுடன் சேர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
உலகில் நிலவி வரும் பொருளாதார நிலை, அரசியல் பதட்டங்கள், வட்டி விகிதம் மாற்றங்கள் ஆகிய பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த 20ம் தேதி சவரனுக்கு ரூ.80 குறைந்திருந்த தங்கம் 21ம் தேதி சவரனுகு்கு ரூ.400 உயர்ந்திருந்தது. அதன்பின்னர் 22ம் தேதி சவரனுக்கு ரூ.240 குறைந்திருந்தது.
23ம் தேதியான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.180 குறைந்திருந்தது. இன்றோ தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கம் அதிகரித்து உள்ளது. இந்த விலை மாற்றங்கள் வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.35 அதிகரித்து 6,695 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,560 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.66,950 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,69,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,304 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,432 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.73,040 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,30,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,695க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,304க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,319க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,695க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,304க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,695க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,304க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,695க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,304க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,695க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,304க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,700க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,309க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.சென்னையில் இன்றைய வெள்ளி விலை ஒரு கிராமிற்கு 1.30 அதிகரித்து 93க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 744 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.930 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,300 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.93,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}