அதிர வைக்கும் பாபா வாங்கா கணிப்புகள்.. 2022க்கு மொத்தம் 6.. அதில் 2 பலிச்சிருச்சு..!

Dec 31, 2022,10:05 PM IST
சென்னை: பாபா வாங்கா கணிப்புகள்.. எப்படி நாஸ்டிரடாமஸ் உலக நிகழ்வுகள் குறித்து முன்கூட்டியே கணித்து வைத்தாரோஅதேபோல பல்கேரியாவைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத பாபா வாங்கா என்பவரும் கணித்து வைத்துள்ளார். அவற்றில் பல நிஜமாகவே நடந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

2022ம் ஆண்டுக்கு அவர் மொத்தம் 6 கணிப்புகளை எழுதி வைத்துள்ளார். அதில் ஏற்கனவே 2 உண்மையாகி விட்டது. இந்த நிலையில் மிச்சமிருக்கும் 4 கணிப்புகளும் நடந்து விடுமா என்ற எதிர்பார்ப்பில் உலக மக்கள் உள்ளனர்.


யார் இந்த பாபா வாங்கா?

மெய்ஞ்ஞானி என்று சொல்வோம் இல்லையா.. அந்த வரிசையைச் சேர்ந்தவர்தான் இந்த பாபா வாங்கா. இவர் ஒரு பெண்மணி. பல்கேரியாவைச் சேர்ந்தவர். தான் கடவுளுடன் பேசி வருபர் என்று அடிக்கடி கூறிக் கொள்வார் பாபா வாங்கா. கண் பார்வை தெரியாத பெண். இவர் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். இந்தக் குறிப்புகள் அவரது மரணத்திற்குப் பின்னர் பலரது கவனத்தையும் ஈர்த்தன. காரணம், அவர் எழுதி வைத்த பல்வேறு கணிப்புகள் உண்மையான காரணத்தால்.

பால்கன் மக்களின் நாஸ்டிரடாமஸ் என்றும் இவர் கொண்டாடப்படுகிறார். செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் 
நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல், 2017ம் ஆண்டு உலகைக் கலக்கிய பிரெக்ஸிட், செர்னோபில் பெரும் துயரம், இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, தாய்லாந்து சுனாமி, பராக் ஒபாமா அதிபரானது உள்ளிட்ட பலவற்றை இவர் முன்கூட்டியே கணித்து வைத்திருந்தார். அவரது கணிப்புகளில் கிட்டத்தட்ட 84 சதவீதம் பலித்துள்ளதாக சொல்கிறார்கள்.

பாபா வாங்காவுக்கு கண் பார்வை பறி போனதும் கூட ஒரு மர்மமாகவே உள்ளது. அவரது 12 வயது வரை எல்லோரையும் போலவே இவர் கண் பார்வையுடன் இருந்து வந்தார். ஆனால் 12  வயதில் அவருக்கு திடீரென கண் பார்வை பறி போனது. எதிர்காலத்தை பார்க்கும் திறமையை கடவுள் தனக்குக் கொடுத்திருப்பதாக அவர் கூறிக் கொள்வார். 1996ம் ஆண்டு  மார்பகப் புற்று நோய் காரணமாக பாபா வாங்கா மரணமடைந்தார். 

5079ம் ஆண்டு வரைக்கு கணிப்புகள்

5079ம் ஆண்டு வரைக்கும் பாபா வாங்கா கணிப்புகளை எழுதி வைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அந்த ஆண்டோடு உலகம் அழிந்து விடுமாம்.  2022ம் ஆண்டுக்கும் 6 முக்கியமான கணிப்புகளைக் கூறியுள்ளார் பாபா வாங்கா. அதில் 2 ஏற்கனவே நடந்து விட்டது. மற்ற கணிப்புகளும் பலிக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

தெற்காசிய நாடுகள், ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பாபா வாங்கா கூறியிருந்தார்.அதன்படியே நடந்தது. அதாவது ஆஸ்திரேலியாவில் கடந்த பிப்ரவரி - ஏப்ரல் மாதத்திற்கு இடையே பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அந்த நாடு ஸ்தம்பித்துப் போனது.  பல நகரங்கள் நீரில் மூழ்கின. அதாவது தென் கிழக்கு க்வீன்ஸ்லாந்து, வைட் பே பர்னாட், நியூ சவுத் வேல்ஸ், பிரிஸ்பேன் ஆகியவை பெரும் பாதிப்பை சந்தித்தன.

அதேபோல உலக நாடுகளில் பல்வேறு நகரங்களில் கடும் குடிநீர்ப் பற்றாக்குறை ஏர்படும் என்று பாபா வாங்கா கூறியுள்ளார். அது தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது.  ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தண்ணீர்ப் பிரச்சினை தலைவிரித்த��டுகிறது. போர்ச்சுகல் நாடு தனது குடிமக்களை தண்ணீரை குறைவாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.  இத்தாலியில் மிக மோசமான வறட்சி தலைவிரித்தாடுகிறது.

சைபீரியாவிலிருந்து மோசமான வைரஸ்

இதுவிர மேலும் பல முக்கிய கணிப்புகளையும் பாபா வாங்கா சொல்லியுள்ளார். சைபீரியாவிலிருந்து ஒரு மோசமான வைரஸ் பரவும். வேற்று கிரகவாசிகள் ஊடுறுவுவார்கள். இந்தியாவில் வெட்டுக்கிளி தாக்குதல் நடைபெறும். விர்ச்சுவல் ரியாரிட்டியின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதில் அதில் சில.

இதுதவிர 2023ம் ஆண்டு பூமியின் சுழற்சி மாறும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். 2028ம் ஆண்டு வெள்ளி கிரகத்திற்கு மனிதர்கள் செல்வார்கள் என்றும் அவர் கணித்துள்ளார். 2024ம் ஆண்டு மனிதர்களின் வாழ்நாள் சராசரி 100 ஆக இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

செயற்கைச் சூரியன் வரும்

இதை விட முக்கியமாக ஒரு கணிப்பை அவர் கூறியுள்ளார். அதாவது 2100ம் ஆண்டு பூமியிலிருந்து இருள் விலகி விடும். செயற்கை சூரிய ஒளியை மனிதன் கண்டுபிடித்து பூமிக்கு வெளிச்சம் கொடுப்பான் என்று தெரிவித்துள்ளார்.
பாபா வாங்கா சொன்ன பலவும் நடந்துள்ள நிலையில் இவையும் நடக்குமானால்.. பூமியின் நிலையைப் பற்றி கற்பனை கூட செய்ய முடியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்

news

பயணங்கள் முடிவதில்லை.. Respect your journey

news

மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு கிடைத்தால்.. If I had life to live over again

news

தமிழகம் முழுவதும் தொடங்கிய SSLC பொதுத்தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

news

தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.. சொன்னது யாரு?

news

பெண்ணாக இருப்பதே பெருமை.. The Pride of Being a Woman (Short Story)

news

பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!

news

சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

அதிகம் பார்க்கும் செய்திகள்