பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற சட்டமன்றக் கட்டிடமான விதான் சௌதாவை குண்டுவெடித்துத் தகர்க்கப்படுவது போன்ற போலியான செயற்கை நுண்ணறிவு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட விவகாரத்தில், பீகாரைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகாரைச் சேர்ந்த 25 வயதான சோயிப் என்ற அந்த இளைஞர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விதான் சௌதா கட்டடம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஒரு மிரட்டலான வீடியோவை எடிட் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோவில் "விதான் சௌதாவை தகர்த்துவிட்டோம்" என்ற தொனியிலான வாசகங்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ பொதுமக்களிடையே பீதியையும், அமைதிக்குக் குந்தக விளைவிக்கும் வகையிலும் அமைந்ததாகக் கூறி, விதான் சௌதா காவல் துறை காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.
சமூக வலைதளங்களைக் கண்காணித்து வந்த காவல்துறையினர், அந்தப் பதிவை உடனடியாக நீக்கியதோடு, இன்ஸ்டாகிராம் கணக்கையும் கண்டறிந்து குற்றவாளியைக் கைது செய்தனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் வதருப்புகளைப் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலின் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா அல்லது இதன் நோக்கம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவறான தகவல்களையும், ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு காவல்துறை எச்சரித்துள்ளது.
சாதிக்க வயது தடையில்லை!
You are the Butterfly
Ominous Silence
பெங்களூரு விதான் சௌதாவில் குண்டுவெடிப்பது போல ஏஐ வீடியோ: பீகார் வாலிபர் கைது!
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!
தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)
Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?
சதய விழா.. இராஜராஜ சோழனைக் கொண்டாடுவோம்!
{{comments.comment}}