வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது கல்யாண நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். காதல் ரசம் சொட்டச் சொட்ட தனது மனைவி மிச்சல் ஒபாமாவை அவர் வாழ்த்தியுள்ளார்.
அமெரிக்க அதிபராக இருமுறை பதவி வகித்தவர் பராக் ஒபாமா. சட்ட நிபுணரான இவரது மனைவி மிச்சல் ஒபாமா, ஒரு ஸ்டைல் ஐகான். இவரும் வழக்கறிஞரே. இருவரும் மேட் பார் ஈச் அதர் என்று சொல்லும் அளவுக்கு சரியான ஜோடிகள்.
குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் ஒபாமா. அதேபோலத்தான் மிச்சலும். இருவருக்குள்ளும் இப்படி ஏகப்பட்ட ஒற்றுமைகள். இருவரும் ஜனநாயக வாதிகள்.. மனதில் பட்டதை பட்டென்று சொல்வது இவர்களது வழக்கம்.
இந்த ஜோடி அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமானது. இவர்களைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு பலருக்கும் பிடித்த ஜோடி. அக்டோபர் 3ம் தேதி ஒபாமா தம்பதியின் திருமண நாள். இதையொட்டி ஒரு அழகான வாழ்த்தை டிவீட் செய்துள்ளார் பராக் ஒபாமா.
ஒரு அழகான வயல்வெளி.. வயலோ சாலையில் ஒயிலாக நிற்கிறார்கள் ஒபாமாவும், மிச்சலும். இருவரும் ஒரே நிறத்தில் உடை.. நீல நிறத்தில். இணைந்து நிற்பதிலிருந்தே தெரிகிறது அவர்களது காதல் வாழ்க்கையின் அழகு.. அங்கு பிறக்கிறது காதல் வாழ்த்து..
"Happy anniversary, sweetheart! @MichelleObama, you're brilliant, kind, funny, and beautiful—and I'm lucky to call you mine" இப்படி கூறி அழகாக வாழ்த்தியுள்ளார் பராக் ஒபாமா.
பதிலுக்கு மிச்சல் ஒபாமாவும் க்யூட்டாக வாழ்த்தியுள்ளார் தனது காதல் கணவரை.. "31 years, and a lifetime to go. I love going through life with you by my side,
@BarackObama . Happy anniversary, honey! என்று கூறி உருகியுள்ளார் மிச்சல் ஒபாமா.
சில காதல்கள் அழகானவை.. சில கல்யாணங்கள் அழகானவை.. இரண்டும் இணையும் போது அவை பேரழகானவை.. அந்த வகையில் ஒபாமாக்கள்.. பேரழகானவர்கள்!
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}