ஜலநாராயணப் பெருமாள்!

Oct 16, 2026,04:31 PM IST

- பாதிராஜன்


ஏப்ரல் 2014 ல் பணியிலிருந்து ஒய்வுபெற்ற சமயத்தில் அமெரிக்காவில் இருந்து என் மைத்துனன், மனைவி, மகளுடன் வந்து முதலில் காஞ்சீபுரம் கோயில்கள் தரிசனம். மறுநாள் ஜலநாராயணன் கோயில் போக வேண்டும் எங்கே இருக்கு தெரியுமா என்றவனிடன் தெரியாது என்றதும், சிரித்து விட்டு திருவள்ளூர் பூங்கா நகரில் இருக்கிறது என்று சொல்ல நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.


அதன் பிறகு நீங்க இதே ஊரிலே இருக்கீங்க உங்களுக்கே தெரியலையே? வடக்கில் ஜலநாராயணன் கோயில் இருக்கிறது அதே போல இங்கே என்றான். சரி நானும் மனைவியும் போகலாம் என நினைத்தும் போக இயலவில்லை. 


நான் ஒய்வுபெற்றதும் மகளுக்கு கேம்பஸ் மூலமாக வேலை முதலில் தரமணி, மகேந்திரசிட்டி பிறகு பெங்களூர். நாங்களும் பெங்களுரில் பெண்ணுடன் தங்கி இருந்தோம். அவளுக்கு திருமணம் முடிந்து அமெரிக்க சென்று விட்டாள். 




2023 திருவள்ளூரில் அலுவலக வழக்கில் சாட்சி சொல்ல சென்றேன். அதன் பிறகு ஜலநாராயணன் கோயில் சென்று வந்தேன். அருமையான கோயில்.


திருவள்ளூரில் வீரராகவர் கோயில் அளவு பிரபலமாகாதது ஏன் எனப் புரியவில்லை. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி,பெளர்ணமி பூஜை, தினமும் மாலை விஷ்ணு சஹஸ்ரநாமம், சிவராத்திரி & நவராத்திரி என எல்லா உத்சவங்ககளும் சிறப்பாக நடைபெறுகிறது. 


மக்களே நீங்களும் மறக்காமல் அங்கு சென்று வருக இறையருள் பெறுக. 


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்