"நீங்க ஆறு பேரும் அங்க போங்க.. வரவே கூடாது".. முதல் நாளே விரட்டிய பிக் பாஸ்!

Oct 02, 2023,11:07 AM IST

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 ஸ்லோகனில் வெளிவந்தது போல,  சும்மாவே வீடு இரண்டாகும்... வீடு ரெண்டு ஆச்சுன்னா... என்ன நடக்கும்...? என்பது போன்ற முதல் நாள் காட்சிகளுக்கான பிரமோ வெளியாகி எதிர்பார்ப்பை டபுள் மடங்காகக எகிற வைத்துள்ளது.


உலக நாயகன் கமல்ஹாசன் தொகுப்பாளராக களம் இறங்கிய பிக் பாஸ் சீசன் 7 விஜய் டிவியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.  "100 நாள் வேலைத்திட்டம்" போல 100 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி இது. என்னதான் ஸ்கிரிப்டட் ரியாலிட்டி ஷோ என்றாலும் கூட ஜாலியாக பொழுது போக்க உதவும்.




இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த பூர்ணிமா ரவி, சுரேஷ், ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, ராப்பர் நிக்சன், வினுசா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா, ஐசு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவணா விக்ரம், யுகேந்திரன் ,விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா, விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.


பிக் பாஸ் சீசன் 7ல் இந்த முறை இரண்டு வீடுகள் இருக்கும் என்பதை நேற்று கமல்ஹாசனே வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தினார். அப்படியானால் ஷோவிலும் டபுள் மடங்காக சுவாரஸ்யம் இருக்கும் என்பதையும் அவர் நடித்த காட்சிகள் வெளிப்படுத்தின. இந்த நிலையில் முதல்நாள் நடந்த நிகழ்ச்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளன. அதற்கான முதல் புரோமோ இன்று வெளியானது. 


முதல் நாளிலேயே பங்கைப் பிரித்துள்ளனர். அதாவது கொஞ்சம் பேரை 2வது வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அதைத்தான் இந்த புரோமோவில் காட்டியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் கேப்டனாக விஜய் வர்மா தேர்வாகியுள்ளார். கேப்டன் விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்ததால் வினுஷா, ஐசு, பவா செல்லத்துரை, அனன்யா, நிக்சன் ஆகிய ஆறு பேரும் இரண்டாவது பாதை வழியாக மற்றொரு வீட்டிற்கு செல்ல வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் இந்த ஆறு போட்டியாளர்களும் முதல் வீட்டிற்கு வரும் வரை பிக்பாஸிடம் பேசக்கூடாது. அறிவிப்பு வரும் வரை இவர்கள் ஆறு பேரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது போன்ற அதிரடி கட்டுப்பாடுகளை பிக் பாஸ் விதிக்கிறார்.




இதைக் கேட்ட  மற்றவர்கள் அதிர்ச்சியில் சமைந்து போகிறார்கள். முதல் நாளே இப்படி திகிலான  காட்சிகளா என்று ரசிகர்கள் உறைந்து போயுள்ளனர். இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ.. இன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 7ல், முதல் நாள் நடந்த காட்சிகளைப் பார்க்க அத்தனை பேரும் காத்திருக்கிறார்கள். நாமளும் காத்திருப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்