புதிய உச்சத்தில் தங்கம் வெள்ளி விலை.. விறுவிறுவென உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

May 18, 2024,12:36 PM IST

சென்னை: புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் அதன் பங்கிற்கு கிராமிற்கு ரூ.4 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாற்று உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் தங்க நகை வாங்குவது என்பது எட்டாக்கனியாகி விடுமோ என வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். தங்கம் விலை தான் உயர்வு என்றால் வெள்ளி விலை அதற்கு ஏற்றார் போல் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு வருகிறது.


தங்கத்திற்கு அடுத்தபடியாக இந்திய மக்கள் பெரும்பாலனவர்கள் விரும்பி வாங்கும் உலோகம் என்றால் அது வெள்ளி தான். தங்கத்தை போலவே, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக உயர்ந்து வந்து வெள்ளி இன்றும்  உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 4 சதவீதம் உயர்ந்து, கிட்டத்தட்ட ஒரு கிலோ வெள்ளி ரூ.4000ம் வரை உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் வெள்ளி விலை 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சோலார் பேனல்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து வெள்ளி உலோகத்திற்கான தேவை அதிகரிப்பது தான் வெள்ளி விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.வரும் காலங்களில் வெள்ளியின் தேவை 6 சதவீதம் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெள்ளியும் தங்கமும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வருகிறது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை...


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,850 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து கிராமிற்கு  ரூபாய் 80 அதிகரித்து சவரனுக்கு ரூ.640 ஆக அதிகரித்துள்ளது.


இன்றைய வெள்ளி விலை...


தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ஒரே நாளில் 4 ரூபாய் உயர்ந்து ரூ.96.50 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 772 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை  நேற்று ரூ.92,500 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் கிலோவிற்கு 4000 ரூாய் உயர்ந்து ரூ.96,500 விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்