Gold Rate: அதிரடியாக சரிந்த தங்கம், வெள்ளி ... தங்கம் சவரனுக்கு ரூ.1520 இறங்கியது!

Jun 08, 2024,11:42 AM IST

சென்னை: சென்னை மார்க்கெட்டில், நேற்று உயர்ந்திருந்த தங்கம், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.1520 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நகைக் கடையில் என்னய்யா நடக்குது... ஒரு நாள் குறையுது, ஒரு நாள் ஏறுது. எது எப்ப நடக்கும்னு தெரியா மாட்டேங்குது அப்படின்னு புலம்புற அளவுக்கு ஆயிப் போச்சு தங்கம் விலை.  என்னக்கி நம்ம கடைக்கு கிளம்புறோமோ அன்று தான் விலை உயரும்.  வீட்டுல இருக்கிறப்பதான்  குறையுது என்று நகை பிரியர்கள் சமீபகாலமாகவே அதிகமாக புலம்பி வருகின்றனர்.  


அதற்கேற்பதான்  தங்கம் விலையும் சமீபகாலமாக இருந்து வருகிறது. நேற்று உயர்ந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி மழையில் ஆழ்த்தியுள்ளது.


டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  காரணமாகவே தங்கம் விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. மேலும், இந்தியா மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்களும் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவதினால் தான் நகை விலை ஏற்ற இறக்கம் கண்டு வருவதாக வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,650 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 190 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.1520 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,200 ரூபாயாக உள்ளது. 

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,255 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,040 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1520 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,656 குறைந்துள்ளது.


சென்னையில் வெள்ளி விலை...


நேற்று உயர்ந்திருந்த  வெள்ளியின் விலையும் இன்றும் குறைந்துள்ளது. அதுவும் அதிரடியாக விலை குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.4.50 காசுகள் குறைந்து ரூ.96க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 768 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,500 இருந்த விலை இன்று ரூ.96,000க்கு விற்கப்படுகிறது. இன்று மட்டும் கிலோவிற்கு ரூ.4500 குறைந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. அதிமுக அதிரடி வேகம்.. விருப்பமனு விநியோகம் தொடக்கம்!

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

அதிகம் பார்க்கும் செய்திகள்