சென்னை: ப்ளூ சட்டை மாறனின் லொள்ளுத்தனத்துக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.. "சென்னை மருந்துக்கடைகளில் க்ளிசரின் வியாபாரம் அதிகரிப்பு" என்று ஒரு டிவீட் போட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் மறைந்தது முதலே அவர் தொடர்பான டிவீட்டுகளைத் தொடர்ந்து போட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன். அதில், விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வராதவர்களைத்தான் அவர் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகிறார்.
விஜயகாந்த்தால் வாழ்வில் உயர்வுக்கு வந்த பலர் அவரது மறைவுக்கு வராமல் உப்புச்சப்பில்லாத காரணங்களைக் கூறி தவிர்த்து விட்டதாக அவர் பகிரங்கமாகவே போட்டுத் தாக்கி வந்தார். யாரெல்லாம் விஜயகாந்த்தால் உயர்ந்தார்கள், யாருக்கெல்லாம் விஜயகாந்த் வாழ்க்கை கொடுத்தார் என்ற பட்டியல் போட்டு கிழி கிழி என்று கிழித்து வந்தார்.

கேப்டன்மில்லர் பட நிகழ்ச்சியில், விஜயகாந்த் பட பாட்டைப் பாட்டிய தனுஷையும் அவர் விடவில்லை. இதுகுறித்து அவர் போட்ட டிவீட்டில், உங்க பட ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்த இடத்துல இருந்து அதிகபட்சம் அரைமணி நேரம் ஆகுமா கேப்டனின் நினைவிடம் இருக்கும் இடம்? அதைவிட்டுட்டு இங்க பாட்டு பாடி பெர்ஃபாம் பண்றீங்க? அருமை கேப்டன் மில்லர் ஐயா. அருமை. என்று கூறியிருந்தார்.
அடுத்து, நடிகர் விஷால் இன்னும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வராதது குறித்து ஒரு மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.
அது மட்டுமா.. "விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை. வெளிநாட்டில் ஷூட்டிங்' என காதுகுத்திய பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள்.. ஆங்கில புத்தாண்டை வெவ்வேறு நாடுகளில் கொண்டாடிவிட்டு சென்னை வருகை. ஓரிரு நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு... ஆறாம் தேதி நடைபெறும் 'கலைஞர் 100' கலைநிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம்" என்றும் ஒரு டிவீட் போட்டிருந்தார்.

இப்படி அடுத்தடுத்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தா வராதவர்களையும், லேட்டாக வந்தவர்களையும் விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன் இப்போது, சென்னை மருந்துக்கடைகளில் க்ளிசரின் வியாபாரம் அதிகரிப்பு? என்று குத்திக் காட்டியிருப்பது யாரை என்று பரபரப்பான விவாதம் கிளம்பியுள்ளது.
அவரது இந்த டிவீட்டை பலர் கண்டித்திருக்கிறார்கள்.. பலர் இருந்தாலும் உங்களுக்குத் தைரியம் ஜாஸ்திதான் என்று பாராட்டியுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}