சென்னை: சென்னையில் நேற்றும் இன்றும் தங்கம் விலை குறைந்திருக்கிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. கடந்த 29ம் தேதி மட்டும் சவரனுக்கு ரூ. 720 உயர்ந்திருந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா? வேண்டாமா? என்று நினைத்துக் கொண்டு தங்கம் விலையை பார்த்தால், அட அது இன்று குறைந்திருந்தது தான் ஆச்சரியம். ஆமாங்க கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சவரனுக்கு ரூ. 720 உயர்ந்திருந்தது. இந்த விலை உயர்வால் நகை பிரியர்கள் கவலையில் இருந்த நிலையில் இன்று விலை குறைந்திருப்பது வடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விலை குறைவு பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்தடுத்து விசேஷங்கள் வருகின்றன. கிறிஸ்துமஸ் வருகிறது, புத்தாண்டு வருகிறது.. அதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை காத்திருக்கிறது.. எனவே மக்கள் நகை, பொருட்கள், துணிமணிகள் வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5850 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 120 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46800 ரூபாயக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6382 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 16 ரூபாய் குறைவாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.51056 ஆக உள்ளது.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.30 காசுகள் அதிகரித்து ரூபாய் 82.50 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 660 காசாக உள்ளது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
விடியலைத் தாடி
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
{{comments.comment}}