ஆளுநர் பதவி தேவையில்லை என கூறிய திமுக, அவரது அதிகாரம் பற்றி பேசுவதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Oct 12, 2026,02:26 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான ஊழல் வழக்கில், ஆளுநரின் அதிகாரம் குறித்து நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட வாதங்களை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் காரசாரமான கேள்விகளை முன்வைத்துள்ளது.   


வழக்கின் பின்னணி:


திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரியும் அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சம்பந்தப்பட்ட மாநில ஆளுநரின் முந்தைய ஒப்புதல் பெறாமல், முன்னாள் அமைச்சர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்ய முடியாது. எனவே, சட்டப்பூர்வ நடைமுறைகள் பின்பற்றப்படாததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார்.   


நீதிபதி கேள்வி:




இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், திமுகவின் அரசியல் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டி பல்வேறு கடுமையான கேள்விகளை எழுப்பினார்.   "திமுக, ஆளுநரின் அதிகாரம் பற்றி எல்லாம் எப்போது பேச ஆரம்பித்தது?" " ஆட்டுக்குத் தாடி எவ்வளவு தேவையற்றதோ, அதுபோல் மாநிலத்திற்கு ஆளுநர் பதவியும் தேவையற்றது' என பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே ஒப்பீடு செய்து விமர்சித்தது திமுக தானே?" "திமுகவின் கொள்கைப்படி ஆளுநர் பதவி என்ற ஒன்றே தேவையற்றது எனும் நிலையில், தற்போது அதே ஆளுநரின் ஒப்புதல் இல்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்யக் கோருவது எந்த வகையில் நியாயம்?" என சரமாரியாக கேள்விகளை கேட்டு திமுக தரப்பை திக்குமுக்காட வைத்துள்ளார் நீதிபதி.  


தமிழக அரசியலில் ஆளுநர் பதவி மற்றும் அவரது அதிகாரங்கள் தொடர்பான விவாதங்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. "ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் தேவையில்லை" என்பது திமுகவின் வரலாற்றுப் பூர்வமான கொள்கை முழக்கங்களில் ஒன்றாகும். திமுக ஆட்சியில் இருந்த வரை கவர்னர் உடனான மோதல் போக்குகள் தொடர்ந்து வந்தன. இத்தகைய சூழலில், ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் தப்பிக்க ஆளுநரின் முன் அனுமதி பெறப்படவில்லை என்ற வாதத்தை திமுக தரப்பு முன்வைத்திருப்பது, சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.நீதிமன்றத்தின் இந்த அதிரடி கேள்விகள், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

நன்றி மோடிஜி.. சோர்ந்து கிடந்தோம்.. இப்ப Brisk ஆயிட்டோம்.. டாக்டர் தமிழிசை ஹேப்பி!

news

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ...!

news

காடு வா வா வீடு போ போ!

news

உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி...அனைவரும் வருமாறு ராகுல் காந்தி அழைப்பு

news

கோவில்பட்டியில் சர்க்கஸ்!

news

ஆளுநர் பதவி தேவையில்லை என கூறிய திமுக, அவரது அதிகாரம் பற்றி பேசுவதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

news

நவராத்திரி ஸ்பெஷல்.. அடுத்த நான்கு நாட்களுக்கு இப்படித்தான் கும்பிடணும்!

news

தெகிட்டினால் விருந்தும் கெடும்.. ஔவையின் ஆத்தி சூடி 60 பொன்மொழிகள் (3)

அதிகம் பார்க்கும் செய்திகள்