CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

Apr 11, 2025,09:27 PM IST

சென்னை:  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக 5வது தோல்வி கிடைத்துள்ளது. சேசிங்தான் செய்ய முடியலை.. சரி முதலில் பேட் செய்யும்போதாவது அதிரிபுதிரியாக ஆட வேண்டாமா.. படு மோசமான பேட்டிங்கை இன்று சொந்த மண்ணிலேயே காட்டி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி மீண்டும் தோல்வியுற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.


முன்னதாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த ஸ்கோரை படு ஸ்டைலாக சேஸ் செய்து சென்னை அணிக்கு சரியான பாடம் கற்பித்து விட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 10.1 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கைத் தொட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.




பந்து வீச்சில் கலக்கிய சுனில் நரீன் பேட்டிங்கிலும் பிரித்து மேய்ந்து விட்டார். சிறப்பாக விளையாடிய அவர் சிக்ஸரையும் பவுண்டரிகளையம் பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். அபாரமாக விளையாடிய சுனில் நரீன், 18 பந்துகளில் 44 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.


குவின்டன் டி காக் 23 ரன்களை எடுக்க, கேப்டன் அஜிங்கியா ரஹானே 20 ரன்களைக் குவித்து அணியை வெற்றி இலக்குக்கு இட்டுச் சென்றார். வின்னிங் ஸ்கோரை ரிங்கு சிங் எடுத்தார்.


நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தோல்விகளைத் தழுவி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். முதல் 5  போட்டிகளிலும் சென்னை அணி சேசிங்தான் செய்தது. அதில் முதல் போட்டியான மும்பை போட்டியில் மட்டும் வென்றது. ஆனால் மற்ற போட்டிகளில் தோல்வியடைந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.



இந்த நிலையில் சென்னை அணிக்கும் கொல்க்ததா நைட் ரைடர்ஸுக்கும் இடையிலான போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.  சரி முதலில் பேட் செய்கிறார்களே, அடித்துத் துவம்சம் செய்வார்கள் என்று பார்த்தால் தங்களது அத்தனை கடந்த கால பெருமைகளுக்கும் திவசம் செய்து விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.


கொஞ்சம் கூட வேகம் இல்லாத பேட்டிங், இன்டன்ட் சுத்தமாகவே இல்லை.. அடித்து நொறுக்கி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற  வெறி இல்லை.. ரசிகர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்களே.. அவர்களுக்காவது ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற வேகம் இல்லை.. இதுவரை இப்படி ஒரு மோசமான பேட்டிங்கை, அதுவும் சேப்பாக்கத்தில் வைத்து இப்படி ஒரு கேவலமான பேட்டிங்கை இதுவரை ரசிகர்கள் பார்த்ததே கிடையாது.




சுனில் நரீன் இன்று அசத்தி விட்டார். விஜய் சங்கர் கேட்ச்சை அவர் மிஸ் செய்து  கொல்கத்தா ரசிகர்களை ஏமாற்றினார். அதற்குப் பதிலடியாக முக்கியமான 3 விக்கெட்களைச் சாய்த்து அசத்தி விட்டார். வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா  2 விக்கெட்களை வீழ்த்தினர்.  ரச்சின் ரவீந்திரா 4, கான்வே 12, ராகுல் திரிபாதி 16, விஜய் சங்கர் 29,  சிவம் துபே 13,  அஸ்வின் 1, ஜடேஜா, தீபக் ஹூடா ஆளுக்கு ஒரு முட்டை, தோனி 1.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் கார்டு இது.


ரசிகர்களின் பேராதரவு இருந்தும் கூட, கேப்டனை மாற்றி தோனியை கேப்டனாக்கியும் கூட, அதிரடியாக அடித்து ஆட முடியாமல், சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான பெர்மார்மன்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் காட்டியிருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியாக உள்ளது!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்