சென்னை: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் இன்று மோதி வருகின்றன. ஆரம்பத்தில் சொதப்பிய சென்னை அணிக்கு ஆயுஷ் மாத்ரேவின் அதிரடி ஆட்டம் சற்று நிவாரணத்தை அளித்துள்ளது.
தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் மோசமான தோல்வியைச் சந்தித்த சென்னை அணி இன்று சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் பஞ்சாப் அணியைச் சந்தித்துள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு சீசனில் சென்னையில் நடைபெறும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

சென்னை அணிக்காக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில் சஞ்சு சாம்சன் இந்த முறையும் சொதப்பினார், ஏமாற்றினார். வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். முதல் போட்டியிலும் சஞ்சு சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் சற்று நிதானித்து ஆடி வருகிறார். ஆனால் தற்போது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேதான் அசத்தலாக ஆடி வருகிறார். சரமாரியாக பவுண்டரிகளை விளாசி அவர் அதிரடியாக ஸ்கோரை உயர்த்தி வருகிறார். இதனால் ரசிகர்களிடையே உற்சாகம் பெருகியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி கணக்கைத் தொடங்கியுள்ளது.
அணிகள் விவரம் - சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (C), சஞ்சு சாம்சன் (WK), ஆயுஷ் மத்ரே, பிரஷாந்த் வீர், சிவம் துபே, கார்த்திக் சர்மா, ஜேமி ஓவர்டன், நூர் அகமது, மாட் ஹென்றி, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது.
பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (C), பிரப்சிம்ரன் சிங் (WK), கூப்பர் கோனொலி, ஷஷாங்க் சிங், நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ யான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால்.
சேப்பாக்கம் மைதானம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}