சென்னை: பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்நிலையில், திமுக அரசுக்கு எதிரான மக்கள் மனநிலை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீதான நம்பிக்கை ஆகியவை குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், தமிழ்நாடு என்டிஏ-வுடன் இருக்கிறது. இன்று பிற்பகல் மதுராந்தகத்தில் நடைபெறும் பேரணியில் என்டிஏ தலைவர்களுடன் நானும் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் நிறைந்த திமுக ஆட்சிக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு மக்கள் முடிவு செய்துவிட்டனர். என்டிஏ-வின் நல்லாட்சி சாதனைப் பதிவும், பிராந்திய மக்களின் விருப்பங்களுக்கு அது அளிக்கும் முக்கியத்துவமும் மாநில மக்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தள பக்கத்தில் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பாஜகவின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று பதிவிட்டுள்ளார்.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}