என்னது.. பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?.. சசிகாந்த் செந்தில் பதிலடி

May 25, 2026,05:01 PM IST

சென்னை: பாஜக வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் பதிலடி கொடுத்துள்ளார்.


சென்னையில் நடந்த திமுக இளைஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது காங்கிரஸை கடுமையாக சாடிப் பேசினார் உதயநிதி ஸ்டாலின். அப்போது பாஜகவின் தொடர் வெற்றிக்கு உண்மையில் காங்கிரஸ் கட்சிதான் உழைத்து வருவதாக, உதவி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு சசிகாந்த் செந்தில் பதில் கொடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள் அறிக்கை:




என்னது.. பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?

அல்லது காலத்திற்கு ஏற்றாற்போல கொள்கையினை மாற்றிக்கொள்ளும் இயக்கங்கள் காரணமா?


1999-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்தது யார்?


2002 கோத்ரா கலவரத்தில்

ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டபோதும்

வாய் திறக்காமல்

அதே கூட்டணியில் தொடர்ந்தது  அதிகாரத்தை அனுபவித்தது யார்?


அது கொள்கை அரசியலா?

அல்லது அதிகாரத்திற்கான பசியா?


அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம்.

ஆனால் தோல்விக்குப் பிறகு

என்ன பேசுவது என்று தெரியாமல் அராஜகமான வார்த்தைகளால் கூட்டணி கட்சிகளை தாக்குவது

அரசியல் நாகரிகம் அல்ல.


மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட சித்தாந்த அரசியல் இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸை விமர்சிக்க, குறைந்தபட்ச அரசியல் அனுபவம் அவசியம். 


கைதட்டலுக்காக பேசப்படும் வார்த்தைகள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்… ஆனால் மக்கள் நினைவில் நிற்பது அரசியல் நாகரிகமும் வரலாறும் தான் என்று அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

நெஞ்சத்தில் நீங்காத இடம்பெற்ற ஆசிரியர்களே!

news

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

news

D. Brinda Wins Award in Creativity Category at Puthiya thalaimurai and kanavasiriyar Teacher Awards

news

ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)

news

விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது

news

CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்