- மீனா
சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் செம சண்டையாகியுள்ளது போல. கூல் சுரேஷுக்கும், பிரதீப்புக்கும் இடையே கடும் வாய்ச் சண்டையாகி, தனது சூட்கேஸையெல்லாம் தூக்கிக் கொண்டு வெளியில் ஓடி வருகிறார் கூல் சுரேஷ். அவர் எங்கே போகிறார் என்று இன்று ராத்திரி தெரிய வரும்.
பிக் பாஸ் 7 தமிழ் விஜய் டிவியில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. வீட்டுக்கு ஒரு இளிவச்சவாயன் இருப்பாங்கள்ல.. அதேபோல பிக் பாஸ் வீட்டுக்கு கூல் சுரேஷ்.. ஆஹா! எப்ப பார்த்தாலும் கூல் சுரேசை கோபப்படுத்தி பார்க்கிறதே ஹவுஸ் மேட்ஸ் வேலையா போச்சு.!

இப்பவும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் சம்பவம் கொஞ்சம் பெருசாய்ருச்சு. பிக் பாஸ் வீட்டை விட்டு கூல் சுரேஷ் வெளியே போகும் புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டை விட்டு கூல் சுரேஷ் பெட்டி படிக்கையுடன் கோபமாக வெளியேறி இருக்கிறார். அதற்கு முன்பு நடந்த சண்டைதான் ஹைலைட்டே!
இன்றைய பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கான புரோமோவில் "அசைஞ்சா போச்சு"என்ற டாஸ்க் நடக்கிறது. தலையில் பெல்லுடன் கூடிய பெல்ட் கட்டி விடப்படுகிறது. அந்த பெல் அசையாமல் ஃப்ரீசாக இருக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதில் கூல் சுரேஷுக்கும் பிரதீப்க்கும் கடும் வாக்குவாதம் நடக்கிறது. கூல் சுரேஷ் எப்பவும் போல கூலாகத்தான் இருந்தார். ஆனால் இந்த பிரதீப் வழக்கம் போல நேர்மையாக விளையாடிக்கிட்டு இருக்கேன் என்னை சீண்டாதீர்கள் நான் அப்படித்தான் பேசுவேன் என்று கூல் சுரேஷிடம் காரசாரமாக பேசுகிறார்.

இந்த நிலையில் விடாமல் பிரதீப் கத்தி கொண்டு தேவையில்லாத வார்த்தைகளை விட்டு விடுகிறார் . வாடா போடா என்றெல்லாம் வார்த்தைகள் தடிக்கின்றன. அடிதடி நடப்பதற்கான அத்தனை அறிகுறிகளும் உருவாகின்றன. இந்த நிலையில், கோபமடைந்த கூல் சுரேஷ் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று பெட்டி படுக்கையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது போல காட்சிகள் போகின்றன.
ஏய்யா ராசாக்களே.. ராசாத்திகளே.. கூல் சுரேஷ் பெயருக்கு ஏற்ற மாதிரி அவரை கூலாகவே இருக்க விட மாட்டீங்களாப்பா.. எப்பப் பார்த்தாலும் அவருடனேயே உறண்டை இழுக்கறீங்களே.. இன்னிக்கு நைட் பார்க்கணும்.. என்னாச்சுன்னு!
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}