மும்பை: சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில், முக்கிய பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்திய கிரிக்கெட் உலகின் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கரின் மகனும், இளம் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கர், தனது நீண்ட காலத் தோழியை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. அர்ஜூன் டெண்டுல்கர் பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தி சானியா சந்தோகியை கரம் பிடித்துள்ளார்.
தனது தந்தை பேட்டிங்கில் சாதித்ததைப் போல, அர்ஜுன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளராகவும், ஆல்-ரவுண்டராகவும் வளர்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், தற்போது கோவா மாநில அணிக்காகத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக, சச்சினின் நெருங்கிய நண்பர்களான சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் வருகை தந்து சிறப்பித்தார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் பங்கேற்றனர். நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினர் இந்த திருமணத்தில் முக்கிய விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
தற்போது இவர்களது புகைப்படங்கள் இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றது. ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் "ஜூனியர் மாஸ்டருக்கு" வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}