ஆஹாடா.. அச்சாடா.. அதிரடியாக விலை குறைந்த தங்கம்.. சவரனுக்கு ரூ.880 கம்மிங்கோ!

May 23, 2024,10:40 AM IST

சென்னை: தங்கம் விலை 4வது வர்த்தக நாளான இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.110 குறைந்து, சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தங்கம் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.  விர்ருன்னு ஏறும்.. அப்புறம் அப்படியே லேசா குறையும். இப்படியே மாறி மாறி விளையாடிட்டிருக்கு தங்கம். கடந்த 20ம் தேதி  சவரனுக்கு ரூ.400 உயர்ந்திருந்த தங்கம், 21ம் தேதி ரூ.320 குறைந்திருந்தது. 22ம் தேதி எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. வைகாசி மாதங்களில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும் என்ற காரணத்தினால், இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே தற்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுவதால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்சம் தொட்ட தங்கம் இன்று விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




சென்னையில் இன்றைய தங்கம் விலை...


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,750 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 110 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.880 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,000 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,364 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,912 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.


சென்னையில் வெள்ளி விலை...


நேற்று உயர்ந்திருந்த வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 3 ரூபாய் 30 காசுகள் குறைந்து ரூ.97க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 776 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00, 300 இருந்த விலை இன்று ரூ.97,000க்கு விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையில் இருந்து கிலோவிற்கு ரூ.3.300 குறைந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்