ரியோ டி ஜெனீரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற 100 அடி உயர இயேசுநாதர் சிலையை மின்னல் தாக்கியகாட்சிகள் அடங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
உள்ளத்தை உறைய வைக்கும் இந்தக் காட்சிகள் பிரேசில் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயேசு நாதர் சிலையின் தலைப் பகுதியில் மின்னல்தாக்கியுள்ளது. இருப்பினும் சிலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னல் தாக்கும் காட்சியை பெர்னாண்டோ பிராகா என்பவர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார். "இறை மின்னல்.. இது வெள்ளிக்கிழமை" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 10ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது.. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் கண்டனம்
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இன்ஸ்டாகிராமில் 63,000க்கும் மேற்பட்ட லைக்குகளை இது குவித்துள்ளது. டிவிட்டரில் 20 மில்லியன் முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.
Christ the Redeemer எனப்படும் இந்த சிலையானது, உலகிலேயே மிகப் பெரிய இயேசுநாதர் சிலையாகும். நிலப்பரப்பிலிருந்து 2000 அடி உயரத்தில் கார்காவோடோ மலையின் மீது இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய உலக அதிசயங்களின் பட்டியலில் இந்த சிலையும் இடம் பெற்றது. 700 டன் கான்க்ரீட்டால் ஆனது இந்த சிலை.
கடந்த காலங்களிலும் கூட இந்த சிலை மின்னல் தாக்கியுள்ளது. 2014ம் ஆண்டு இந்த சிலையை மின்னல் தாக்கியது. அப்போது லேசான சேதம் ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}