சென்னை: தேனிசைத் தென்றல் தேவா வெறும் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தனது இசையின் மூலமாக பலருக்கும் தனித்துவமான அடையாளம் கொடுத்தவர்.
மிகப் பெரிய ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருந்த இசைஞானி இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த சமயத்தில் மனசுக்கேத்த மகராசா படம் மூலமாக திரையுலகுக்கு வந்தவர் தேனிசைத் தென்றல் தேவா. ஆரம்பத்தில் அவரது இசை இளையராஜாவின் இசையை ஒத்து இருந்தது. பின்னர் தனது பாணியை மாற்றியமைத்தார்.
ஒரு கட்டத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று இரு பெரும் புயல்களுக்கு மத்தியில் தேவாவின் இசை எப்படி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது தனது பாணியை சட்டென மாற்றி கானாவுக்கு மாறினார். அதன் பிறகு தேவாவின் இசை தனித்துவமானது, சர்வதேச அளவில் கானாவைக் கொண்டு சென்ற முதல் இசையமைப்பாளர் தேவா.
தேவாவின் இசை இடம் பெறாத உச்ச நடிகர்களே அப்போது இல்லை. ரஜினிகாந்த், விஜய், அஜீத், கமல்ஹாசன் என அனைவருக்கும் இவரது இசை பொருந்திப் போனது.

பலருக்கும் தனித்த அடையாளத்தைக் கொடுத்தவர் தேவா. வாராறு அழகர் வாராறு என்ற பாடல் ஒலிக்காமல் மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சமான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் முடிவடைவதில்லை.
ரஜினிகாந்த்தின் டைட்டில் கார்டுக்கு தனி வைப் கொடுத்தவர் தேவா. அண்ணாமலை, பாட்ஷா என ரஜினிக்கு இசையமைத்த படங்களில் தனித்துவமான இசையைக் கொடுத்து இன்று வரை அந்த வைப் இருக்கும் அளவுக்கு பிரமாதப்படுத்தியவர் தேவா.
இப்போதைய முதல்வரான விஜய் முதல் முறையாகப் பாடியது தேவா இசையில்தான். ரசிகன் படத்தில் அவர் பாடிய பாம்பே சிட்டி பாடல்தான் விஜய் திரையில் பாடிய முதல் பாடல். அதேபோல விஜய்க்கு பல சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்தவர் தேவா.
அஜீத்தின் காதல் கோட்டை படத்தை அவரது கெரியரில் மறக்கவே முடியாத படம். அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் தேவாதான். அஜீத்தின் பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் தேவா.
பிரஷாந்த முதலில் நடித்து அறிமுகமான வைகாசி பொறந்தாச்சுதான் தேவாவுக்கு முதல் சூப்பர் ஹிட் படம். அந்தப் படம் அவருக்கு மாநிலஅளவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது.
பக்திப் பாடல்களில் ஆரம்பித்த அவரது இசை வாழ்க்கை திரைக்கு வந்த பிறகு ஜெகஜோதியாக பிரகாசித்தது. தனது சகோதரர்களுடன் இணைந்து கடைசி வரை ஒற்றுமையான குடும்பமாக இசைக் குடும்பமாக வாழ்ந்து வந்த தேவாவின் மறைவு, நிச்சயம் திரை இசைப் பிரியர்களுக்கு வருத்தமான ஒன்றுதான்.
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
‘தேனிசைத் தென்றல்’ இசையமைப்பாளர் தேவா காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதி: தொடரும் தீவிர சிகிச்சை
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
{{comments.comment}}