தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!

Oct 18, 2026,11:32 AM IST
- மு. ரம்யா ஆனந்த்

தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி 

கானா பாடலின் துள்ளலிலும்,
காதல் பாடலின் மெல்லிசையிலும்,
எங்கள் இதயங்களை வருடியவரே…
இன்று எங்கள் கண்களில்
கண்ணீரை விட்டுச் சென்றீரே!

திரையிசை உலகில்
தனித்துவம் படைத்தவரே…
எத்தனை பாடல்கள் தந்தீரோ,
அத்தனையிலும் எங்கள்
நினைவுகளை விதைத்தீரே!



திருவிழாக்களில் ஒலித்த உங்கள் இசை,
காதலர்களின் நினைவுகளில் உங்கள் இசை,
நண்பர்களின் கொண்டாட்டங்களில் உங்கள் இசை…
இனி ஒவ்வொரு பாடலும்
உங்கள் நினைவுகளைச் சுமந்து வருமே!

கலைஞர்கள் மறைவதில்லை…
அவர்கள் படைத்த கலை மறைவதில்லை…
உங்கள் குரல் அல்ல,
உங்கள் இசை வழியே
நீங்கள் என்றும் வாழ்வீர்கள்!

தேனிசைத் தென்றலே…
உங்கள் இசை நின்றாலும்,
உங்கள் புகழ் நிற்காது…
காலங்கள் கடந்தாலும்,
உங்கள் பாடல்கள் மறையாது!

இசை உலகம் இழந்தது ஒரு கலைஞரை…
தமிழ் இதயங்கள் இழந்தது ஓர் இனிய இசை நினைவை!

(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்