- அஸ்வின்
சென்னை: தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் ஜூன் 13ம் தேதி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது ஜூலைக்குத் தள்ளிப் போவதாக ஒரு செய்தி உலா வருகிறது. இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தனுஷின் ராயன் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. காரணம், இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டார் காஸ்ட். பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் என பெரிய பெரிய நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். இதுவரை 2 பாடல்கள் வெளியாகி விட்டன. அதிலும் 2வதாக வெளியான வாட்டர் பாக்கெட் செம ஹிட்டாகி விட்டது.
என்ன சிறப்பு என்றால் இந்தப் படத்தின் ஹீரோவாக தனுஷ் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு இணையாக நடித்திருக்கும் சந்திப் கிஷன் கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்த தனுஷ் விரும்புவதாக தோன்றுகிறது. ஏனென்றால் தனுஷ் படத்தில் தனுஷை மட்டும் தான் அனைவரும் கொண்டாடுவார்கள். அது எல்லாருக்குமே வந்து தெரிஞ்ச ஒரு விஷயம். ஆனா அப்படி இருக்கிறப்போ சந்திப் கிஷனுக்கு ஒரு பாட்டு வச்சு அவருக்கும் ஹிட் கொடுத்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்பட்டதுத
வடசென்னை படத்தில் அந்த படத்தோட இரண்டாவது பாதியில் அமீர் வந்திருப்பார். கிட்டத்தட்ட அந்த படத்தை வந்து தூக்கி நிறுத்துவது அமீர் தான். இதெல்லாம் தனுஷோட பெருந்தன்மைன்னு சொல்லலாம். தன்னோட நடிக்கிறவங்களையும் கொண்டாடணும், அப்படின்னு தனுஷ் நினைக்கிறார் போல. அதனாலதான் சந்திப் கிஷனுக்கு ஒரு பாடல் கொடுத்து அவரையும் பெரிய லெவல்ல காட்டியிருக்கிறார்.
இதுல செல்வராகவனும் நடிக்கிறார். பெரிய பெரிய ஆட்களும் இருக்காங்க. ஆனால் சந்திப் கிஷனுக்கு இவ்வளவு முக்கியத்துவம், அதுவும் ஹீரோ லெவலுக்கு எதுக்கு ஒரு பாட்டு கொடுக்கணும், அவரோட ரோலை எதுக்கு இவர் இவ்வளவு தூரம் தூக்கிப் பிடிக்கணும்.. அப்படின்னு தெரியலை.. பட் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் கிஷன் வருவதாக தோன்றுகிறது.
யார் நடிச்சாலும் ஒட்டுமொத்த பேரோட போக்கஸ் தனுஷ் மேல தான் இருக்கும். குறிப்பாக மாரி படத்தில் கிருஷ்ணாவும் நடித்திருப்பார்.. அவருக்கும் நல்ல ஸ்கிரீன் ஸ்பேஸ் இருக்கும். தனுஷோட பிரண்டா வருவாரு. படத்தில் பருத்திவீரன் சரவணனும் இருக்கார். அவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் பருத்திவீரன் கதாபாத்திரம் போல ராயனிலும் சரவணன் கதாபாத்திரம் வலு சேர்க்கும் என்று நம்பலாம்.
இப்போது படத்தின் ரிலீஸுக்காக அத்தனை பேரும் காத்திருக்கிறார்.. பட்டாசு எப்ப வெடிக்கலாம்.. ஜூன் மாசமா அல்லது ஜூலையா என்பது மட்டும்தான் இப்போது விடை தெரிய வேண்டிய கேள்வியாக இருக்கிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}