திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக.. முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு

Feb 19, 2026,06:02 PM IST

சென்னை: தேமுதிக இன்று திமுக கூட்டணியில் இணைந்தது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கூட்டணியில் இணைந்தார்.


திமுக கூட்டணிக்கு வருகை தந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் 6 அல்லது 8 சட்டசபைத் தொகுதிகளை தர திமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எல்லாமே பேசி முடித்த பிறகே கூட்டணிக்கு தேமுதிக வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 


மறைந்த கேப்டன் விஜயகாந்த்தால் தொடங்கப்பட்ட கட்சி தேமுதிக. திமுகவை எதிர்த்து மிகக் கடுமையான போரே தொடுத்தவர் விஜயகாந்த். அதேபோல அதிமுகவையும் அவர் தொலைவிலேயே வைத்திருந்தார். 2 தேர்தல்களை தனித்து சந்தித்த அவர் பின்னர் காலத்தின் கோலமாக கூட்டணி அரசியலுக்கு மாறினார். அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றார்.




ஆனால் அதன் பிறகு தேமுதிகவுக்கு இறங்குமுகம் ஏற்பட்டது. கட்சி உடைந்தது. படிப்படியாக செல்வாக்கையும் இழந்தது. விஜயகாந்த் பின்னர் பல்வேறு கூட்டணிகளுக்குள் பயணப்பட்டார். எந்த ஒரு வெற்றியையும் பல வருடங்களாக பெறாமல் இருந்து வந்தது தேமுதிக.


கடந்த சட்டசபைத் தேர்தலைஅதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து சந்தித்தது . ஆனால் பெரும் தோல்விதான் கிடைத்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது. அதிலும் தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் தற்போது கூட்டணியை மாற்றியுள்ளது தேமுதிக. முதல் முறையாக திமுக கூட்டணிக்கு வந்துள்ளது.


கலைஞர் கருணாநிதி உயிருடன் இருந்தபோது தேமுதிகவை தனது கூட்டணிக்கு கொண்டு வர ஆசைப்பட்டார். தீவிரமாகவும் முயன்றார். பழம் நழுவி வருகிறது. பாலில் விழும் என்று கூட நம்பிக்கையுடன் கூறியிருந்தார். ஆனால் ஜெயலலிதா முந்திக் கொண்டதால் தேமுதிக, அதிமுக கூட்டணிக்குப் போய் விட்டது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் கூட்டணிக்கு தேமுதிக வந்து சேர்ந்துள்ளது.


தமிழ்நாட்டில் தேமுதிகவுக்கு ஒரு சதவீத அளவுக்குக் கூட தற்போது வாக்கு வங்கி இல்லை என்றாலும் கூட விஜயகாந்த் அனுதாபிகள், விஜயகாந்த் மீது பாசம் வைத்துள்ளோர் இன்னும் உள்ளனர். அவர்களின் ஆதரவை திமுக கூட்டணி பெற முடியும் என்று திமுக நம்புகிறது. 


கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக தொடர்ந்து அதிமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என்று பயணப்பட்ட நிலையில் முதல் முறையாக திமுக அரசியலுக்கு வந்துள்ளது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: நூர் அகமது அபாரம்.. கொல்கத்தாவை 32 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

news

தமிழ்ப் புத்தாண்டு .. பராபவத் தாய் பிறப்பெடுத்தாள் ஆண்டு அறுபதில் அவளும் ஒருதாய்!

news

புத்தாண்டே வருக, புன்னகையுடன் வாழ்த்திடு, ஒவ்வொருவரின் வாழ்விலும் புது பொலிவை தந்திடு!

news

உன் குரலில் என் இதயம் இளைப்பாறுகிறது.. அவளின் (ல்) அவன்! (9)

news

தமிழ்ப் புத்தாண்டில் இதைக் கற்போம்.. பூ கோர்க்கலாம் வாங்க!

news

Tamil New Year: முத்திரை பதிக்கப் போகும் தமிழ்ப் புத்தாண்டு.. சித்திரை மாத சிறப்புகள்!

news

கோவிலில் நடந்த கலாட்டா.. விஷாலின் விளையாட்டுகள் 10

news

சிந்தனைச் சிதறல்.. குறையை குறைவாய்க் காண்போம்.. நிறையை நிறைவாய்க் காண்போம்!

news

Dr Ambedkar Birth Anniversary: அறிவின் உச்சம் அம்பேத்கரின் சட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்