ஈரோடு கிழக்கு காங்கிரஸுக்கே.. ஒதுக்கியது திமுக.. வேட்பாளர் யார்?

Jan 20, 2023,10:03 AM IST
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திமுக கொடுத்து விட்டது. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கில் போட்டியிட்டது. அதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  முக்கிய வேட்பாளர் யுவராஜா ஆவார்.  இவர் தமாகா சார்பில் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னத்தில் நின்று தோற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் திருமகன் ஈவேரா அகால மரணமடைந்தார். இதனால் இத்தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸே போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்ற விவாதங்கள் எழுந்தன.  மறுபக்கம் அதேபோல தமாகா மீண்டும் போட்டியிடுமா அல்லது அதிமுக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இன்னொரு பக்கம் பாஜகவும் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்த நிலையில்தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கியுள்ளது திமுக. இடைத் தேர்தல் தொடர்பாக நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது தொகுதியை காங்கிரஸுக்கே ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சலசலப்புக்கு திமுக முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்திலிருந்து ஒருவர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

news

முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

news

Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!

news

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

news

வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!

news

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்