சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து அல்ல. தொண்டர்களாகிய நீங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே பாமகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறித்து நேற்று தைலாபுரம் தோட்டத்தில் சரமாரியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பேசியிருந்தார் டாக்டர் ராமதாஸ். இதையடுத்து மாவட்டச் செயலாளர்களுடன் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆலோசனையில் இறங்கியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், பொறுப்புகள் வரும் போகும். நிரந்தரமான உங்களின் அன்பும் பாசமும் தான் எனக்கு வேண்டும். அந்த பாசம் என்றும் போகாது. உங்களில் ஒருவனாக ஒரு தொண்டனாக நான் நிற்கின்றேன். நமக்குள் வேற்றுமைகள் இருக்க கூடாது. மருத்துவர் ஐயா அவர்கள் நமது கட்சியை தொடங்கியிருக்கிறார். அவரின் கொள்கைகளை மனதில் நிறுத்தி நாம் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நம்முடைய இலக்கு. இதை அடைவதற்கு நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும். நமக்குள் எந்த வேற்றுமைகளும் இருக்கக் கூடாது. தமிழ் நாட்டில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உங்கள் ஆதரவுகளை கொடுங்கள்.
எதையும் எதிர்பார்த்து வராதீர்கள். ஏமாந்து போவீர்கள். கேள்விக்கு பயந்தவன் நான் கிடையாது. என்ன கேள்வி வேண்டுமானாலும் நீங்கள் என்னிடம் கேட்கலாம். சிறப்பு சந்திப்பு விரைவில் நடைபெறும்.
பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. தனி நபரின் சொத்து அல்ல. தொண்டர்கள் இல்லாமல் பாமக கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சி என்பது நானோ இவங்களோ கிடையாது. நீங்கள் தான். நீங்கள் இல்லை என்றால் பாட்டளி மக்கள் கட்சி கிடையாது. பொதுக்குழுவில் முறையாக நீங்கள் எல்லாம் தான் என்னை தேர்வு செய்தீர்கள். உங்களோடு சேர்ந்து ஒரு அடி மட்ட தொண்டனாக நான் செயல்படுவேன். அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து கட்சியை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்
டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி
{{comments.comment}}