சென்னை : கடந்த சில மாதங்களாகவே பாமக.,வில் அப்பா டாக்டர் ராமதாஸ் மற்றும் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் விவகாரம் தமிழக அரசியல் களத்தில் புகைந்து கொண்டிந்தது. சமாதானம் ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும் கூட நீரு பூத்த நெருப்பாக இது இருந்து வ்நதது. இந்த நிலையில் இன்று எல்லாற்றையும் போட்டு உடைத்து விட்டார் டாக்டர் ராமதாஸ்.
இதனால் கட்சிக்குள் யாருடைய கை ஓங்கும், பாமக இரண்டாக உடையுமா, அன்புமணியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இன்றைய பேட்டியின்போது டாக்டர் ராமதாஸ் பகிரங்கமாகவே அன்புமணி பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து விட்டார். பாமக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் அரங்கையும் இது அதிர வைத்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று பேசுகையில், "கடந்த சட்டசபை தேர்தலில் நான் அதிமுக., உடன் தான் கூட்டணி வைக்க விரும்பினேன். ஆனால் அன்புமணியும், அவரது மனைவியும் காலில் விழுந்து, என்னை பாஜக., கூட்டணியில் இணைய வைத்தனர். ஒருவேளை அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிட்டு இருந்தால் பாமக.,விற்கு குறைந்த பட்சம் 4 சீட்டுகளாவது கிடைத்திருக்கும். அதே போல் அதிமுக.,விற்கு அது பலனுள்ளதாக அமைந்து கூடுதல் இடங்களில் வெற்றி பெற வாய்ப்பாக அமைந்திருக்கும். அன்புமணிக்கு அரசியல் பக்குவம் இல்லை. அவருக்கு தலைவராக இருக்க தகுதி இல்லை" என அடுக்கடுக்காக புகார்களை அடுக்கி விட்டார்.
தான் பாஜக கூட்டணியை விரும்பவில்லை. அதிமுக கூட்டணியில் இணையவே விரும்புவதாக ராமதாஸ் கூறுகிறார். இதுதான் பெருத்த விவாதங்களை கிளப்பியுள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக., கூட்டணியில் இணைவதை ராமதாஸ் ஓப்பனாக சொல்லி விட்டார் என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ராமதாஸ் வேண்டாம் என்று நினைத்த பாஜக கூட்டணியில் தான் தற்போது அதிமுக.,வே உள்ளது. அதிமுக-பாஜக இரண்டுமே ஒரே கூட்டணியில் இருக்கும் இந்த நிலையில் அதிமுக.,வுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் முன் வருவாரா? அல்லது பாஜக உடன் இணைய கூடாது என்பது உறுதியாக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை ராமதாஸ் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய விரும்பவில்லை என்றால் அடுத்ததாக பாமக முன் இருக்கும் வாய்ப்பு சீமான், விஜய் போன்றவர்களை ஒன்றாக இணைத்து, தனியாக பாமக தலைமையில் ஒரு கூட்டணி உருவாக்கலாம். அப்படி தனியாக ஒரு கூட்டணி அமைத்து தன்னுடைய அரசியல் அனுபவத்தையும், பாமக.,விற்கு வட மாவட்டங்களில் இருக்கும் செல்வாக்கையும் வைத்து திமுக-அதிமுக கூட்டணிகளுக்கு டஃப் கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மீது டாக்டர் ராமதாஸுக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பதால் அவர் அதிமுகவுக்கு எதிராக போவாரா என்ற கேள்வியும் உள்ளது.
இந்த இரண்டு வாய்ப்புகள் தவிர மூன்றாவதாக ஒரு வாய்ப்பும் பாமக முன் உள்ளது. அது என்னவென்றால், யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக கூட்டணியில் போய் சேரலாம். ஆனால் சமீப காலமாக திமுக அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சியான அதிமுக.,விட மிக அதிகமாக விமர்சித்து, எதிர்த்த கட்சி பாமக தான். அதனால் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு தான். மேலும் டாக்டர் ராமதாஸை, வேலை வெட்டி இல்லாதவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒரு பேட்டியின்போது விமர்சித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
முன்பு போல தனித்துப் போட்டியிடும் முடிவை டாக்டர் ராமதாஸ் எடுப்பாரா என்பதும் கேள்விக்குறிதான். காரணம், தற்போது ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் பிரச்சனையால் பாமக இருக்கும் நிலையில் தனித்து போட்டியிட்டால் அது பாமக.,விற்கு பெரும் சரிவையே தரும். இதனால் தனித்து போட்டி என்ற வாய்ப்பை ராமதாஸ் கண்டிப்பாக எடுக்க மாட்டார் என்றே அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
மிகப் பெரிய சிக்கலிலும் இக்கட்டிலும் பாமக வந்து நிற்கிறது. டாக்டர் அன்புமணி பாமகவை கைப்பற்ற முனைந்தாலோ அல்லது கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறினாலோ, டாக்டர் ராமதாஸ் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே இந்த நிலையை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார்.. கட்சியின் பழைய தளபதிகள் (பண்ருட்டி வேல்முருகன் உள்ளிட்டோர்) உதவியை அவர் நாடுவாரா, வன்னியர் சமுதாயம் யாருக்குப் பின்னால் அணி வகுக்கப் போகிறது என்ற மில்லியன் டாலர் கேள்விகள் எழுந்துள்ளன... பதிலை காலம்தான் சொல்ல முடியும்.
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
கோவையில் பெய்து வரும் தொடர் மழை..சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு.. 40 அடியை நெருங்குகிறது..
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
பிரம்மாண்ட ஏற்பாடுகள்.. தவெக கல்வி விருது விழா.. குவிந்த மாணவர்கள்.. வழங்குகிறார் விஜய்!
பதிலடி கொடுக்கத் தயாராகும் டாக்டர் அன்புமணி.. நாளை முதல் 3 நாட்கள் அதிரடி ஆலோசனை!
வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது.. அன்புமணிக்கு தலைமை பண்பு அறவே இல்லை.. டாக்டர் ராமதாஸ்!
{{comments.comment}}