- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை, ஈரோடு
தேவாவின் இசை என்றால் தேனமுதம் சிந்துமே
தேனிசைத் தென்றலின் பாடல் மனம் வருடுமே
ராகத்தின் ராகமாய் ரம்மியம் தந்தவரே
ரசிகர்களின் மனதில் கோபுரமாய் நிற்பவரே
சந்தத்தில் சாகசம் சங்கமம் செய்தவரே
சாதனை சிகரமாய் சரித்திரம் படைத்தவரே
மெட்டுக்குள் மாயமாய் மெல்லிசையை புகுத்தியவரே
மக்களின் மனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவரே

காலம் இன்னுமிருக்க காலன் உன்னை அணைத்துக் கொண்டான்
அவசரமாய் விண்ணுலகம் சென்று விட்டாய்
நீ மறைந்தாலும் நின் கானங்கள் இன்னிசையாய்
நீ சிரித்தாலும் நின் ராகங்கள் பூமழையாய்
(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் மணிமா என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
{{comments.comment}}