இந்தியாவின் தெறி ஆட்டம்.. இறுதிப் போட்டிக்குப் போக .. இங்கிலாந்துக்குத் தேவை 254 ரன்கள்!

Mar 05, 2026,08:51 PM IST
மும்பை: 2026 ஆம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் விறுவிறுப்பான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் இந்தியா பேட் செய்தது.  தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன், இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் வெறும் 42 பந்துகளில் 89 ரன்கள் (7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) குவித்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

மறுபக்கம், இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்களும், திலக் வர்மா ஆட்டத்தின் இறுதியில் அதிரடியாக விளையாடி ரன் வேகத்தை உயர்த்தினர். 



சஞ்சு போன இடைவெளியை ஈடுகட்டும் வகையில் இருந்தது ஷிவம் தூபேவின் அதிரடி. சிக்ஸர்களாக விளாசித் தள்ளிய ஷிவம் தூபே, 25 பந்துகளில் 43 ரன்களைக் குவித்தார்.

கடைசி ஓவர்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை 250 கடக்கச் செய்தது.

இங்கிலாந்து தரப்பில், வில் ஜேக்ஸ் மற்றும் ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்