ஓட்டல் ஊழியர்களை தாக்கிய விவகாரம்: தலைமை காவலர் மோகன் குமார் சஸ்பெண்ட்!

Feb 09, 2026,04:35 PM IST

ஈரோடு: காஞ்சிக்கோயில் பகுதியில் இரவு 10 மணியைக் கடந்து இயங்கிய உணவகத்தில் சென்று அங்கு வேலையில் இருந்த ஊழியரைத் தாக்கிய தலைமைக் காவலர் மோகன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


ஈரோடு மாவட்டம், பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் இரவு 10 மணிக்கு ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணியாற்றி வரும் மோகன் குமார் ரோந்து சென்றுள்ளார். அப்போது 10 மணிக்கு மேல் திறந்திருந்த உணவகத்தை மூட சொல்லி தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார் காவலர் மோகன் குமார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த தலைமைக்காவலர் மோகன் குமார், அங்கிருந்த ஊழியர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்களைக் கைகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.




இந்தத் தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் எழுப்பியது. இந்தச் சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றது. முதற்கட்ட விசாரணையில், காவலர் மோகன் குமார் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதும், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதும் உறுதி செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, தலைமைக்காவலர் மோகன் குமாரைப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

news

தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!

news

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

news

தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்

news

டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா

news

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி

அதிகம் பார்க்கும் செய்திகள்