- ஈரோடு மாலதி
செங்கோல் என்பது தமிழர்களின் அரச மரபு, நீதி மற்றும் நேர்மையின் அடையாளமாகும். இதன் வரலாறும் பெருமையும் காலம் கடந்து இன்றும் இந்திய ஜனநாயகத்தின் உச்சியில் மிளிர்கிறது.
பழந்தமிழ் சோழப் பேரரசில் புதிய அரசன் ஆட்சிப் பொறுப்பேற்கும் போது, குருமார்கள் அல்லது தலைமைப் புலவர்களால் செங்கோல் வழங்கும் வழக்கம் இருந்தது. இது "செங்கோன்மை" அதாவது அறவழியில் ஆட்சி நடத்துவதைக் குறிக்கும் சின்னமாகும்.
பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதைக் குறிக்கும் அடையாளமாக, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத் திருவாவடுதுறை ஆதீனத்தால் செங்கோல் வழங்கப்பட்டது. இது மதராஸ் மாகாணத்தில் இருந்து பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பல ஆண்டுகள் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோல், மே 2023ல் புதிய இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் முறைப்படி நிறுவப்பட்டது.
"செந்தண்மை கொண்ட கோல்" என்பதே செங்கோல் ஆயிற்று. குடிமக்களைக் கண்மணி போலக் காத்து, பாரபட்சமின்றி நீதி வழங்குவதே இதன் முக்கியச் செய்தி. நீதி தவறாத ஆட்சிக்கும், இறையாண்மைக்கும் இது சான்றாகும்.
செங்கோலின் உச்சியில் வீற்றிருக்கும் நந்தி, சிவபெருமானின் வாகனமாகவும், நீதி மற்றும் ஆன்மீகத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது இது தருமம் தலைவாசல் காக்கும் என்பதைக் குறிக்கிறது.
(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)
கலைவாணி சுகபாணி!
கலைமகளே நீ வாழ்க!
செங்கோல் - இந்திய ஜனநாயகத்தின் உச்சியில் மிளிரும் வரலாறு
சமையல் With ஸ்வர்ணா - மழைக்காலத்திற்கான ஸ்பெஷல் மணத்தக்காளி காய் & பூண்டு குழம்பு!
அன்னை சரஸ்வதி.. இல்லம் இனிமையாயிற்று! !
அறிவு கொழுக்க அகல் கொளுத்துவோம் - ஆயுதம் செய்ய அறிவை வழுத்துவோம்!
கலைமகளின் திருநாள்!
பெண் என்பவர் யார்?
என்று மாறும்?
{{comments.comment}}