கும்பாபிஷேகம்.. கோலாகலமாக தயாராகி வரும்.. ஈரோடு திண்டல் முருகன் கோவில்!

Feb 20, 2026,11:59 AM IST
- ஸ்வர்ணலட்சுமி 

விசுவாசு வருடம் 2026 பிப்ரவரி 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாசி மாதம் 10 ஆம் நாள் திண்டல் முருகன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. 

"கும்பாபிஷேகத்தை கண்டால் கோடானு கோடி புண்ணியம் "மற்றும் "கும்பாபிஷேகம் 12 வருடங்களுக்கு ஒரு முறை" என்பது பிரபலமான மரபு வழி சொற்கள் ஆகும்.

கொங்கு மண்டலத்தின் முக்கியமான முருகத்தலங்களில் ஒன்றான ஈரோடு மாநகரிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திண்டல் மலையில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற முருக பெருமான் திருத்தலம் திண்டல் வேலாயுத சாமி கோவில் ஆகும்.

திண்டல் கோவிலில் அருள் பாலிக்கும் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி 'குமார வேலாயுத  சுவாமி' என அழைக்கப்படுகிறார். இவர் திண்டல்மலை மீது கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.இத்தலம் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும்.



சிறிய குன்றின்  மேல் அமைந்துள்ள கோவிலுக்கு செல்ல படி வழியும்,வாகன வசதியும் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா உடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள  அபிராமி அம்பிகை உடனமர் அமிர்தகடேஸ்வரர் (பாணலிங்கேஸ்வரர்) கோவில் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து விநாயகர் வழிபாட்டு பூஜைகளுடன் திஷா ஹோமம்,சாந்தி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். புதிய சிலைகள், ராஜகோபுர நிலைகளுக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது.

யாக பூஜை& யாகசாலை :

தாரமங்கலம் சர்வ சாதக செம்மல் திருஞானசம்பந்தர் சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேக விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. யாக சாலையில் முருகப்பெருமானுக்கு 33 யாக குண்டங்கள், சிவபெருமானுக்கு 5 யாக குண்டங்கள், அபிராமி அம்பிகைக்கு 5 யாக குண்டங்கள், விநாயகர் பெருமானுக்கு 5 யாக குண்டங்கள்,பரிவார தெய்வங்களுக்கு 6 யாக குண்டங்கள், பாலிகை 1 குண்டம்  என மொத்தம் 55 குண்டங்கள் கொண்ட பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
 
நிகழ்ச்சி நிரல் :
 
யாக பூஜைகள் யானைக்கு செய்யும் கஜ பூஜை,குதிரைக்கு செய்யும் அஸ்வ பூஜை, பசுமாட்டுக்கு செய்யும் கோ பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

பிப்ரவரி 20 ஆம் தேதி  வெள்ளிக்கிழமை காலை 8:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையும் மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் சிறப்பான யாக பூஜைகள் நடைபெறுகின்றது.
 
பிப்ரவரி 21ஆம் தேதி சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அன்னதானம்:

கும்பாபிஷேக  விழாவையொட்டி   22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி முதல் வேளாளர் கல்லூரி வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

கும்பாபிஷேக நேரம்:
 
பிப்ரவரி 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 :00மணிக்கு ஆறாம் காலை யாகபூஜை நடைபெற உள்ளது. காலை 5:30 மணிக்கு கடம் புறப்பாடு பூஜை நடைபெறும். காலை 6:45 மணி முதல் 7:00 மணிக்குள் திண்டல் வேலாயுத சாமி கோவில் மற்றும் அபிராமி அம்மன்  உடனமர் அமிர்தகடேஸ்வரர் மூலஸ்தான கோபுரம் மற்றும் பரிவார விமான கோபுரங்கள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 7: 10 மணி முதல் 7: 45 மணிக்குள் வேலாயுத சாமி அபிராமி அம்மன் உடனமர் அமிர்தகடேஸ்வரர், அனைத்து பரிவார மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.ஞாயிறு மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண விழாவும் நடைபெறவுள்ளது. 
 
தத்துவம்:

கும்பாபிஷேக தத்துவம் யாதெனில் கும்பத்தில் தெய்வ சக்தியை ஆவாகனம் (அழைத்தல்) செய்து கலச தீர்த்தத்தை விக்கிரகங்கள் மற்றும் கோபுர கலசங்கள் மீது அபிஷேகம் செய்வது.
 
கும்பாபிஷேக விழாவினை கண்டுகளிக்க, முருகன் அருள் பெற பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் இதுபோன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!

news

அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!

news

தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!

news

கும்பாபிஷேகம்.. கோலாகலமாக தயாராகி வரும்.. ஈரோடு திண்டல் முருகன் கோவில்!

news

கிராமத்து மொழியில் ஒரு கவிதை.. இல்லை பாட்டு.. அட ஜாலியா படிங்களேன்!

news

ராமாயி...ராமாயி... இங்க பாரு.. (கோடாங்கி.. திகில் தொடர்-3)

news

இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?

news

விஜய்க்கு "விஜயகாந்த்" மூலம் செக் வைத்த திமுக.. கருணாநிதி விட்டதைப் பிடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக.. முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்