சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.58,360க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,295க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.107க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் திடீர் என நேற்று சரிந்து வாடிக்கையாளர்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இதனாலும், தீபாவளி பண்டிகை வருவதாலும் நேற்று நகை கடைகளில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்தும், ஒரு சில நாட்கள் மட்டும் குறைந்து வருவது, நகை வாங்குபவர்களிடையே அதிர்ப்பதிய ஏற்படுத்தி வருகிறது. இதனால், இந்த நகை விலையில் அரசு தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று பெண்பிள்ளைகள் வைத்திருப்போர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.7,295க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,958க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,360 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,950 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,29,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,958 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,664 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.79,580 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,95,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,958க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,310க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,973க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,958க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,958க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,958க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,963க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த அக்டோபர் 18ம் தேதியில் இருந்து தொடர்ந்து உயரத்தொடங்கியது வெள்ளி விலை இன்று சரிந்துள்ளது. இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து ரூ.107க்கு விற்கப்பட்டு வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.107 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,070 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}