அப்பாடா.. வாரத்தின் முதல் நாளிலேயே ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு!

Apr 22, 2024,06:41 PM IST

சென்னை: கடந்த சில நாட்களாக வரலாற்று சாதனை படைத்து வந்த தங்கம் இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப் பிரியர்களிடையே  சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தின் கடைசியில் இருந்து புதிய உச்சத்தில் உயர்ந்து கொண்டே வந்தது. இந்த விலை ஏற்றத்தால் நகைப்பிரியர்கள் மிகுந்த கவலை அடைந்து வந்தனர். இந்திய மக்கள் மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்கள் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவது தான் முக்கிய காரணமாக கூறப்பட்டு வந்தது. நகைப்பிரியர்களுக்கு தங்கத்தின் விலை ஏற்றம் கவலை  ஏற்படுத்தியது ஒரு பக்கம் என்றால், நகையில் முதலீடு செய்பவர்களிடையே இந்த விலை ஏற்றம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல நாட்களுக்கு பின்னர் இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நீடிக்குமா? அல்லது மீண்டும் நகை விலை அதிகரிக்குமா? என்று வாடிக்கையாளர்கள் புலம்பி வருகின்றனர். ஏற்றம் காணும் போது சவரனுக்கு ரூ.1000 மாகவும், தங்கம் விலை குறைவு என்றால் சவரனுக்கு ரூ.200, 300 என குறைவது மிகுந்த வருத்தத்தை ஏற்படத்துவதாக வாடிக்கையாளர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். எது எப்படியோ நகையின் தேவையும் குறையப்போவது கிடையாது,  விலையும் குறையப் போவது கிடையாது. சரி வாங்க இன்றைய நகை விலை நிலவரத்தைப் பார்ப்போம்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,845 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 40 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.320 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,760 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,467 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,736 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது. 


சென்னையில் வெள்ளி விலை...


இன்றைய வெள்ளியின் விலை குறைந்துள்ளது.  இன்று 1 கிராம் வெள்ளி விலை 89 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 712 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000  குறைந்து ரூ.89,000த்திற்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்