சென்னை: இது நிஜமா.. மெய்யேதானா.. ஆச்சரியமா இருக்கே.. நேற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. கலயாண சீசனான தை மாதத்தில் தொடரும் இந்த விலை குறைவு நகைப்பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
என்னய்யா நடக்குது நாட்டுல.. அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லாம் தாறுமாறா ஏறும் இந்த காலகட்டத்தில் தங்கத்தின் விலை மட்டும் குறைந்து கொண்டே வருகிறது. அதுவும் இந்த மாதம் கல்யாண முகூர்த்தம் வேற நிறைய இருக்கும் என்பதால், தங்கம் விலை குறைவு அனைத்து தரப்பிரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ. 480 குறைவு
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. தை மாதம் என்றால் நகை விலை உயரத்தான் செய்யும் என்பார்கள். காரணம் வாங்குவது அதிகம் இருக்கும் என்பதால். கல்யாண சீசன் மாதமும் கூட. ஆனால் இந்த தை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் விலை குறைந்து கொண்டே வருவதால்.
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5830 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 160 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46640 ரூபாயக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6360 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 22 ரூபாய் குறைவாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.50,880 ஆக உள்ளது.
வெள்ளியும் குறைவுதான்
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 76 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 608 உள்ளது. 10 கிராம் வெள்ளியின் விலை ரூ. 760 ஆக இருக்கிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலையில் இறக்கம் காண்பதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விலை குறைவு பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}