சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,000க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,375க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் வர்த்த நாளான நேற்று தங்கம் விலை குறைந்திருந்தது. இது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மகிழ்ச்சி இன்றும் தொடரும் என்று பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அது நீடிக்க வில்லை. அது மட்டும் இன்றி வரலாற்றின் புதிய உச்சத்தை தங்கம் விலை எட்டியுள்ளது. இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமிற்கு இன்று மட்டும் ரூ.480 உயர்ந்து சவரனுக்கு ரூ.59,000த்தை எட்டியுள்ளது தங்கம். இந்நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இதோ...
சென்னையில் இன்றைய (29.10.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.7,375க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.8,045க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 59,000 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.73,750 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,37,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,045 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,360 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.80.450 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,04,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,375க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,045க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,390க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,060க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,375க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,045க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,375க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,045க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,375க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,045க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,375க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,045க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,050க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமிற்கு ரூ.1 அதிகரித்து ரூ.108க்கு விற்கப்பட்டு வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.108 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,080 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
{{comments.comment}}