சென்னை: தங்கம் விலை மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.57,920க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 14,15ம் தேதிகளில் குறைந்திருந்த தங்கம் 16,17ம் தேதிகளில் உயர்ந்திருந்த நிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்தே உள்ளது. தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி சொல்வது வாடிக்கையாளர்களிடையே கலக்கத்ததை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயர்விற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றம், வல்லரசு நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் உலக நாடுகளின் நாணயக் கொள்கைகள், ஐரோப்பிய மத்திய வங்கி நேற்று அறிவித்த வட்டி குறைப்பு உள்ளிட்ட காரணங்களினால் தான் தங்கம் விலை தற்போது தாறுமாறாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை செப்டம்பர் மாதம் மத்தியில் 2600 டாலராக இருந்தது, சற்றும் எதிர்பாராத விதமாக இன்று 2700 டாலர் அளவீட்டைத் தாண்டி பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதனால் இனி வரும் காலங்களில் நகை விலை உயர்விற்கு வழி வகுக்கும் என்றும், நகையில் முதலீடு செய்பவர்களுக்கு வருங்காலம் பொன்னான காலமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.7,240க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,898க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 57,920 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,24,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,898 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,184 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.78,980 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,89,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,898க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,255க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,913க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,898க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,898க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,898க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,898க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,245க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,903க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த மாத இறுதியில் இருந்து நேற்று வரை வெள்ளி விலை பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்தது. இந்த நிலையில் இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.105க்கு விற்கப்பட்டு வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.105 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 840 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,050 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,500 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,05,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}