சென்னை: பட்ஜெட் எதிரொலியாக கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது. இன்றைய ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440க்கு விற்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டின் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.3040 குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து 6,430 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.64,300 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,43,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,015 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,120 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.70,150 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,01,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 6,982க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,415க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,995க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,982க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,982க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை மட்டும் இன்றி வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து ரூ.89க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 712 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.890 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,900 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.89.000 ஆக உள்ளது.
ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு
மகளிர் சுதந்திர உலகப் பயணம்!
திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 28, மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி
காஸ் ஆட்டோக்களுக்கு சிக்கல்.. காஸ் நிரப்ப நீண்ட க்யூவில் காத்திருப்பபு.. பயணிகளும் பாதிப்பு
நடிகை ஹன்சிகா மோத்வானி - சோஹைல் கதூரியா தம்பதி விவாகரத்து
தீயாய் பரவும் வதந்தி.. பெட்ரோல் பங்குகளில் குவிந்த மக்கள்.. பீதி தேவையில்லை என அரசு விளக்கம்
பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? - தமிழக அரசிற்கு விஜய் சரமாரி கேள்வி
யோசனை, சிந்தனை, ஒருமுகப்படுத்துதல் (செறிவு) & தியானம்
{{comments.comment}}