தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு என்ன ரேட் தெரியுமா?

Jul 26, 2024,05:14 PM IST

சென்னை:   சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் தொடர்ந்து சரிவு நிலை காணப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.51,320  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.


ஜூலை 18ம் தேதியில் இருந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.3160 குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தங்கம் விலை குறைந்து வருவதால் நகை கடைகளிலும் ஆடி மாதத்திலும் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும், இந்த தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து 6,415 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,320 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.64,150 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,41,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,998 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.55,984 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.69,980 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.6,99,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 6,982க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,415க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,995க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,982க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,982க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை மட்டும் இன்றி வெள்ளி விலையும் நேற்று  வரை குறைந்து இருந்தது.இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது. இன்றைய வெள்ளி விலை ரூ.89க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 712 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.890 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,900 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.89.000 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்