அட என்னாச்சு.. தொடர் சரிவில் இருந்து எழுந்த தங்கம்.. விலை உயர்ந்தது!

Oct 05, 2023,11:56 AM IST
சென்னை: தொடர்ந்து சரிவில் இருந்த தங்கம், வெள்ளி விலை இன்று சற்று உயர தொடங்கியுள்ளது. ஒரு சவரனுக்கு ரூபாய்  80 என உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்தபடி இருந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் தங்கம் வாங்க பலரும் ஆர்வம் காட்டினர். இந்த நிலையில் வாரத்தின் 4ம் நாளான இன்றும் தங்கம் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. 



செப்டம்பர் மாதத்தில் சரிவில் இருந்த தங்கம் விலை அக்டோபர் ஆரம்பத்திலும் குறைந்தே இருந்தது.  இன்று சற்று உயரத் தொடங்கியுள்ளது. இந்த விலையேற்றம் வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அடடா, வாங்கலாம்னு நினைக்கிறப்போ உயர்ந்திருச்சே என்று பலரும் அங்கலாய்க்கின்றனர். 

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் இதுதான்.. 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5295 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 42360 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5776 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 11 ரூபாய் அதிகமாகும். 

தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் நேற்றைய விலை அப்படியே தொடர்கிறது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.70.70 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 565.60 காசாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்