சென்னை: தங்கம் விலை நேற்றும் இன்றும் ரூ.1120 வரை குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகில் நிலவி வரும் பொருளாதார நிலை, அரசியல் பதட்டங்கள், வட்டிவிகிதம் மாற்றங்கள் ஆகிய பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையிலான 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்திருந்த நிலையில், ஆடிப்பெருக்கு அன்று நகை விலை குறைந்தது அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதன்பின்னர் ஏற்றம் கண்டு வந்த தங்கம் நேற்றும் இன்றும் மட்டும் சவரனுக்கு ரூ.1120 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவரன் 55,000த்தை தொட்ட தங்கம் தற்பொழுது சவரன் 50,000த்திற்கு குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் படு குஷியாகியுள்ளனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.70 அதிகரித்து 6,330 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 50,640 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.63,300 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,33,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,906 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.55,248 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.69,060 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.6,90,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,350க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,927க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,365க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,942க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,350க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,927க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,350க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,927க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,350க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,927க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,350க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,927க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,932க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
கடந்த 2 நாட்களாக வெள்ளி விலை குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி 0.50 காசுகள் குறைந்து சவரனுக்கு ரூ.87க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 696 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.870 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,700 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.87,000 ஆக உள்ளது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}