சென்னை : கடந்த ஒரு மாதமாக இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் துவங்கி உள்ளது. இன்று கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5787 க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மீண்டும் வருவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கம் விலை செப்டம்பர் மாதத்தில் சரிவுடனேயே காணப்பட்டது. அக்டோபர் மாதம் ஆரம்பத்திலும் குறைந்தே இருந்தது. இந்த நிலை இன்று மாறி சற்று உயரத் தொடங்கி உள்ளது. இந்த விலையேற்றம் வாடிக்கையாளர்களை சிறிது கவலையில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை கால, திருமண சீசன் துவங்க உள்ள நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.

இன்றைய தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5305 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 42440 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5787 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 22 ரூபாய் அதிகமாகும்.
தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.72.10 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 576.80 காசாக உள்ளது.
தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சுப காரியங்கள் ஏதும் நடக்காமல் உள்ளது. புரட்டாசி மாதமும், மகாளய பட்ச காலமும் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது. அதற்கு பிறகு திருமண முகூர்த்தம் ஆரம்பமாகி விடும். ஐப்பசி மாதத்தில் திருமணம் வைத்திருப்பவர்கள் அமாவாசையில் தங்கம் வாங்கலாம், புரட்டாசி மாதத்தில் விலை குறையும் வாங்கலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் புரட்டாசி மாதம் முடிவடைவதற்கு முன்பே தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதால், தக்காளி விலை போல் எங்கே தங்கம் விலையும் அதிரடியாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுமோ என்ற கலக்கம் வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}