தொடர் சரிவில் தங்கம்... சவரனுக்கு ரூ.800 குறைவு... நகை வாங்க இதுவே நல்ல நேரம்.. கிளம்புங்க!

May 24, 2024,11:35 AM IST

சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்திருந்த நிலையில், இன்றும் கிராமிற்கு ரூ.100 குறைந்து சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலோகங்களில் தங்கத்திற்கென்றே தனி இடம் உண்டு. தங்க நகை இன்றி எந்த சுபநிகழ்ச்சிகளுக்கும் இடம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தங்கத்திற்கு தமிழகத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. இத்தகைய தங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய உச்சம் தொட்டு, வாடிக்கையாளர்களை கதிகலங்க வைத்தது என்றே சொல்லலாம். இத்தகை தங்கம் கடந்த 3 நாட்களாகவே விலை குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த 21ம் தேதி சவரனுக்கு ரூ.320தும்,22ம் தேதி மாற்றமின்றியும், 23ம் தேதி சவரனுக்கு ரூ.880தும், இன்று சவரனுக்கு ரூ.800மாக, கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2000 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை கோடை மழையுடன் சேர்ந்து மகிழ்ச்சி மழையிலும் நனைத்து வருகிறது. அதுவும் வைகாசியில் விஷேசங்கள் வைத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள், மக்களே சீக்கிரம் கிளம்புங்கள் இதுவே நல்ல சந்தர்ப்பமாகும்... அதற்கு முன்னர் இன்றைய விலை நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க....


சென்னையில் இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,650 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 110 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.800 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,200 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,255 ரூபாயாக உள்ளது.


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,040 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 குறைந்துள்ளது. ஒரு கிராம் 18 கேரட் தங்கம் ரூ.5447க்கும், 18 கேரட் தங்கம் 8கிராம் ரூ.43,576க்கும் விற்கப்பட்டு வருகிறது.


சென்னையில் வெள்ளி விலை...


நேற்று குறைந்திருந்த வெள்ளியின் விலை இன்றும் குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.50 காசுகள் குறைந்து ரூ.96.50க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 772 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.97,000 இருந்த விலை இன்று ரூ.96.500க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்