சென்னை: சென்னையில் இன்றைய 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் இன்று குறைந்துள்ளது. ஆவணி மாதம் 1ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசு சுங்க வரியை குறைத்த பிறகு தங்கம் விலை சவரன் ரூ.55,000த்தில் இருந்து குறைந்து ரூ.50,000த்திற்கு விற்கப்பட்டது.
அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் சிறிது சிறிதாக உயர்ந்து தற்பொழுது ரூ.53,000த்திற்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் நகைப்பிரியர்கள் மிகுந்த கவலை தெரிவித்து வந்தனர். இருப்பினும், ஆவணி மாதம் விஷேசங்கள் அதிகம் என்பதால் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த தங்கம், இன்று குறைந்துள்ள சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து 6,660 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,280 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.66,600 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,66,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,265 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,120 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.72,650 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,26,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,265க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,675க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,280க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,265க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,265க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,265க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,265க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,665க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,270க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.சென்னையில் இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் 92க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 736 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.920 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,200 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.92,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}