சென்னை: தொடர்ந்து உயர்ந்து வருகிறது தங்கம் விலை. சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,565க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்று குறைந்திருந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த தொடர் உயர்வால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை, மத்திய அரசு சுங்க வரியை குறைத்த காரணத்தினால், சவரனுக்கு 5000 வரை விலை குறைந்தது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியுள்ளது. சீனாவில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வு, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், ஜப்பானில் வட்டி விகித உயர்வின் தாக்கம் ஆகிய பல காரணங்களால் தங்கம் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை:

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.95 அதிகரித்து 6,565 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 52.520 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.65,650 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,56,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,162 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,296 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.71,620 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,16,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்:
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,565க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,162க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,580க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,177க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,565க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,162க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,565க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,162க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,565க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,162க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,565க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,162க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,570க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,167க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை:
கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த வெள்ளி விலை நேற்று கிராமிற்கு 0.60 காசுகள் குறைந்து ரூ.87.50க்கு விற்கப்பட்டது. நேற்று குறைந்த வெள்ளியின் விலை இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்து ரூ.88.50க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 708 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.885 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,850 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.88,500 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}