கிளம்பலாம்.... கிளம்பலாம்.... நகை வாங்க இது தான் சரியான நேரம்... இன்று விலை என்ன தெரியுமா?

Jul 19, 2024,01:21 PM IST

சென்னை:  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.55,000க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராமிற்கு ரூ.30 குறைந்து ரூ.6,875க்கு விற்கப்படுகிறது. 


சென்னையில் கடந்த 16ம் தேதி  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360ம், 17ம் தேதி சவரனுக்கு  ரூ.720 உயர்ந்து ரூ.55.360க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த விலை உயர்வு நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நேற்று  தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்திருந்தது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை சற்று மகிழ்ச்சி அடையச் செய்தது. 


நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் நகை விலை குறைந்துள்ளது. தொடர்ந்து நகை விலை குறைந்து வருவது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் நகை விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தற்போது விலை குறைந்துள்ள சந்தர்ப்பத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொல்லாம். சரி மக்களே நகை கடைக்கு கிளம்புவோமா....


சென்னையில் இன்றைய தங்கம் விலை




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,875 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 30 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.240 ஆக உள்ளது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 55,000 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.68,750 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,87,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,500 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,000 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.75,000 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,50,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,815க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,435க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,830க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,450க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,815க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,435க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,815க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,435க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


சென்னையில் வெள்ளியின் விலையில் கடந்த 16ம் தேதி கிராமிற்கு 0.20 காசுகள் குறைந்து  ரூ.99.50க்கு விற்கப்பட்டது. ஆனால், 17ம் தேதி  வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 உயர்ந்து, ரூ.100.50 ஆக விற்கப்பட்டது. நேற்று  தங்கத்துடன் சேர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 1 ரூபாய் 30 காசுகள் குறைந்து ரூ.99.20க்கு விற்கப்படுகிறது. நேற்று மட்டும் இல்லை இன்றும் வெள்ளி விலை குறைவு தான்.


1 கிராம் வெள்ளி விலை ரூபாய் 97.75 ஆக உள்ளது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 782 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.977.50 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,775 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.97,750 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்