- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
அது கண்களின் மொழி..!!!
அது ஒரு அன்பு மொழி..!!!
அது ஒரு பொது மொழி...!!! (புன்னகை)
ஒரே ஒரு முறை ...
வெளியே வந்து விட்டால்...!!!
உள்ளே போகவே முடியாது..!!! (பெண்ணின் கருவறை)
ஒரே ஒரு முறை ....
உள்ளே போய்விட்டால்..!!!
வெளியே வரவே முடியாது...!!! (கல்லறை)

உன் இல்லத்தின் பெயர் ,
"அன்னை" இல்லம் ...!!! ஆனால்
உன் அன்னை இருப்பது ..??? (முதியோர் இல்லம்)
உன் எடை குறைக்க ,
வடை உதவாது...!!!
ஆனால் இது நன்கு உதவும்..!!.!!! ( நடை பயிற்சி)
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}