சென்னை : அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் அதற்கு பிறகு அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. வெயிலின் கொடூர தாக்கம் எப்போது தான் குறையும், கொஞ்சம் மழை பெய்யாதா என ஏங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு குட் நியூசாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி இருந்தது. இதனால் மக்கள் சந்தோஷப்பட்டனர். வானிலை மையம் சொன்னது போலவே நேற்று பிற்பகல் முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட சில இடங்களில் மழையும் பெய்தது.

இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதற்கு பிறகு 3 நாட்களுக்கு வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரளவிற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா, தென் தமிழகத்தின் கடலோர பகுதிகள், தெற்கு கேரளாவின் கடலோர பகுதிகளில் கடல் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மீண்டும் நீ வேண்டும் பாரதி!
Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?
கொந்தளித்த திருமா.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
அவசியம் என்றால் தவறான பக்கத்தை கிழிக்கலாம்!
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
{{comments.comment}}