சென்னை: வீட்டு தண்ணீர்த் தொட்டியை நிறையப் பேர் சரியாக சுத்தம் செய்யவே மாட்டார்கள். இது ஆபத்தானது. குறைந்தது வருடத்திற்கு 4 முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அதுதான் நல்லது.
போர்வெல் அல்லது கிணற்று நீர் பயன்படுத்தினால் குறைந்தது 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
அதேபோல தண்ணீரில், மண், சேறு, பாசி அல்லது துர்நாற்றம் இருந்தால் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். அப்படி அதிகம் நேரிட்டால் மாதம் ஒருமுறை சுத்தம் செய்வதும் அவசியமாகும்.
மழைக்காலத்தின்போது குடிநீத் தொட்டியை அடிக்கடி பராமரிக்க முடியாது. ஆனால் மழைக்காலத்திற்குப் பிறகு கண்டிப்பாக ஒரு முறை சுத்தம் செய்வது நல்லது.
தொட்டியின் மூடி சரியாக இல்லாமல் தூசி, பூச்சிகள் அல்லது இலைகள் உள்ளே விழும் வாய்ப்பு இருந்தால் 3 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

குடிநீர்த் தொட்டியை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். முதலில் தொட்டியை முழுவதும் காலி செய்யவும். பிறகு அடியில் தேங்கியுள்ள சேறு மற்றும் அழுக்குகளை அகற்றவும். சுவர் மற்றும் அடிப்பகுதியை பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தமாக கழுவவும்.
அதன் பிறகு சுத்தமான நீரால் பலமுறை தொட்டியை அலச வேண்டும். தேவைப்பட்டால் லேசான குளோரின் கரைசல் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யலாம். மீண்டும் நிரப்புவதற்கு முன் தொட்டியை நன்றாக அலசி விடவும். சுத்தமாக தொட்டி மாறிய பின்னர் தண்ணீரை நிரப்ப வேண்டும்.
குடிநீர் தொட்டியில் பாசி, சேறு, கிருமிகள் வளர்ந்தால் வயிற்றுப்போக்கு, குடல்தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே கண்ணுக்கு சுத்தமாகத் தெரிகிறது" என்பதற்காக சுத்தம் செய்வதை தள்ளிப்போடக் கூடாது.
இதுவே பிளாஸ்டிக் தொட்டி என்றால், அதாவது சின்டெக்ஸ் என்றால் 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது பாதுகாப்பான நடைமுறையாகும்.
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}