- ஜெனிட்டா ரீனா
தொலைதுர பயணம், சுற்றுலா, உடனடி உணவு தயாரிப்பு என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு சட்டென வருவது கலவை சாதம். அதிலும் நினைக்கும் போதே வாயில் எச்சியூறும் சாதம் புளி சாதம். இந்த உடனடி புளியோதரை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
6 மாதங்களுக்கு மிகாமல் கெட்டுப்போகாமல் பாரம்பரிய புளியோதரை மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

புளி- எலுமிச்சை பழ அளவு
கொத்தமல்லி விதை( தனியா)-25 கிராம்
துவரம்பருப்பு-15 கிராம்
கடலைப்பருப்ப-15 கிராம்
உளுந்தம் பருப்ப- 15 கிராம்
காய்ந்த மிளிகாய்-10 ( காரத்திற்கேற்ப)
பூண்டு- 1
பெருங்காயம்- தேவைக்கேற்ப
வெந்தயம்- 10 கிராம்
சீரகம்-5 கிராம்
கல் உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை -கைப்பிடி அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியில் சிறிது நல்லெண்ணைய் ஊற்றி ஒவ்வொன்றாக மிதமான சூட்டில் வறுத்தெடுக்க வேண்டும்
பின் சிறிது நேரம் ஆறியவுடன் மிக்சியில் சிறிது கொரகொரப்பாகஅரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த மசாலா வை ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
தேவைப்படும் போது நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடான சாதத்தில் புளியோதரை மசாலா சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
வேண்டுமெனில் சிறிது தாளிப்பு( நல்லெண்ணெய், கடுகு , கறிவேப்பிலை) செய்து சாப்பிட்டால் நாவில் அறுசுவை நடனமாடும்.
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
{{comments.comment}}