Jokes: யாருங்க அந்தப் பொண்ணு.. உங்களை மச்சான்னு கூப்புடுது!

Jan 30, 2023,01:41 PM IST
மனைவி : என்னங்க! இதுவரை உங்களை நான்கூட மச்சான்னு சொன்னதில்ல. FACEBOOK-ல யாரோ ஒரு பொண்ணு உங்களை மச்சான்னு சொல்றாளாமே. யார் அது?
கணவன் : அப்படியெல்லாம் மரியாதை இல்லாம பேசக்கூடாது. அவங்க உனக்கு தங்கச்சி மாதிரி
மனைவி : தங்கச்சி மாதிரியா? எந்த வகையிலும் சொந்தம் இல்லாத ஒரு பொண்ணு உங்களை மச்சான்னு... எப்படி சொல்ல முடியும்?
கணவன் : மகாத்மா காந்தியை நீ என்னன்னு சொல்லுவ..?
மனைவி : காந்தி தாத்தா..
கணவன் : ஜவஹர்லால் நேருவை என்னன்னு சொல்லுவ..?
மனைவி : நேரு மாமா..
கணவன் : இப்படி உனக்கு எந்த சொந்தமும் இல்லாத இவங்களை, நீ உறவுமுறை சொல்றீயே, அப்படி தான்.
மனைவி : ???



--

உலகத்திலேயே Best Friend யார் தெரியுமா?
நம் இரண்டு கண்கள் தான்.
இரண்டுமே ஒன்றாக தூங்கும்
ஒன்றாக முழிக்கும்
ஒன்றாக அழும்
but ஒரு பெண்ணை பார்த்தால்,
ஒரு கண்மட்டும் சிமிட்டும், இதிலிருந்து என்ன தெரிகிறது?

ஒரு பெண் நினைத்தால் எதையும் பிரிக்க முடியும்...!!

--

லைட்டா கொஞ்சம் கடி!

* பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கி தான் ஆகணும்.

* பேக் வீல் (Back Wheel) எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல (Front Wheel) முந்த முடியாது இது தான் உலகம்.

* என்ன தான் மனுஷனுக்கு வீடு, வாசல், காடுன்னு எல்லாம் இருந்தாலும் ரயில் ஏறனும்னா, பிளாட்பாரத்துக்கு வந்து தான் ஆகணும்.

* ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்...
காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்...
ஆனால், பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?...

--

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்